
Maravaa Devan Undu Christian Song Lyrics
Maravaa Devan Undu Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Hema John, Augustin Rajasekar.
Maravaa Devan Undu Christian Song Lyrics in Tamil
மறவா தேவன் உண்டு
உன்னை நடத்தி சென்றிடுவார்
நினைக்கும் தேவன் உண்டு
உன்னை சுமந்து சென்றிடுவார் (2)
சோர்ந்திடாதே கலங்கிடாதே
பயந்திடாதே திடன் கொண்டிரு (2)
1. வெண்கல கதவை உடைத்திடுவார்
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவார் (2)
சாத்தானின் தடைகளை தகர்த்திடுவார்
சகல நன்மையால் நிறைத்திடுவார் (2)
2. போக்கிலும் வரத்திலும் காத்திடுவார்
காரியம் யாவையும் வாய்க்க செய்வார் (2)
மனிதரின் தயவையும் காண செய்வார்
கிருபையாய் உன்னை நடத்தி செல்வார் (2)
3. கூப்பிடும் வேளையில் செவி கொடுப்பார்
வார்த்தையால் உன்னை தேற்றிடுவார் (2)
குறைவுகள் யாவையும் நிறைவாக்குவார்
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார் (2)