
Muttrilum Jeyam promise song lyrics – முற்றிலும் ஜெயம்
Muttrilum Jeyam promise song lyrics – முற்றிலும் ஜெயம்
ஆயத்தமாகு நீ ஆயத்தமாகு
வெற்றிசிறக்க நீ ஆயத்தமாகு
முழங்கிடு நீ முழங்கிடு
வெற்றிக்குரலை நீ எழுப்பிடு
ஜெயம்தரும் கர்த்தராலே ஜெயத்தை நீ பெற்றிடு
ஆர்ப்பரி ஜெயம் ஜெயம்
துதித்திடு ஜெயம் ஜெயம்
முற்றிலும் ஜெயம்கொள்ளுவேன் நான்
தோல்வி எனக்கில்லையே
- குதிரைகளால் ஜெயம் வருவதில்லை
இரதங்களினால் ஒருபயனுமில்லை
சேனைகளின் கர்த்தரே நமக்கு துணையானாரே
வெற்றிசிறந்திடவே நாம் முன்னேறி சென்றிடுவோம் - சத்துருவால் தீங்கு ஒன்றும் வருவதில்லை
சர்பத்தினை ஜெயித்தவர் நமக்கு உண்டு
சேனைகளின் கர்த்தரே நம் முன்னால் சென்றிடுவார்
ஜாதிகளின் மேலே அதிகாரம் செய்திடுவோம் - ஜெபத்துடனே கர்த்தருக்கு காத்திருப்போம்
துதிகளுடன் அவர் நாமம் உயர்ந்திடுவோம்
கழுகைப்போலவே உயரே பறந்திடுவோம்
மான்களை போலவே உயரத்தில் ஏறிடுவோம்
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31