யாருக்குத் தான் தெரியும் அவர் மகிமை – Yaarukku than theriyum Avar Magimai Tamil Christian Songs lyrics in English
யாருக்குத் தான் தெரியும் அவர் மகிமை
பாருலகோர் தொழும் பார்த்திபன் அருமை யாருக்கு
1.பாவத்தின் சம்பளம் மரணத்தை ஜெயிக்க
இயேசுவினால் வரும் ஜீவனைக் கொடுக்க
பாவத்தில் மாண்டவர் மீண்டுமே பிழைக்க
சாபத்தை போக்கவர் செய்திட்ட கிரியை
2.குஷ்டரோகிகளின் கூக்குரல் கேட்டார்
கஷ்டப்படுவோர்க்கு காட்சி அளித்தார்
பாவபடுக்கையை மாற்றி அமைத்தார்
தேவ திருதொனிதேனாய் அளித்தார்
3.மலைபிரசங்கத்தில் மாதேவன் தாமே
விலையில்லா பொன்மொழி அளித்தவராமே
காசினியோர் புகழ் காத்தவராமே
இத்தரை மீதினிலே வித்தகனாமே
4.மூவுலகோர் தொழும் தேவக்குமாரன்
முள்முடி சூடியே மூன்றாணி மீதில்
முடிந்தது என்றவர் ஜீவனை விட்டு
மூன்றாம் நாள் ஜீவனோடெழுந்திட்ட தேவன்
5.நாற்பது நாள்வரை நானிலமீதில்
நம்பிடும் அன்பரை கண்டுகளித்து
வானத்தின் மேகத்தில் ஏறியே சென்று
திரும்ப வருவேனென்று மறைந்தார்
Yaarukku than theriyum song lyrics in english
Yaarukku than theriyum avar mahimai
Paarulakor tholum Parthiban arumai
1.Paavathin sambalam maranathai jeyikka
Yesuvinal varum jeevanai kodukka
Paavathil maandavar meendumae pilaikka
Saabathai pokkavar seithitta kiriyai
2.Malai pirasangathil maadevan thamae
Vilai illa ponmoli alithavaramae
Kasiniyor pugal kaathavaramae
Itharai meethinil vithaganamae
3.Moovulagor tholum devakumaran
Mulmudi soodiyae moondrani meethil
Mudinthathu endravar jeevanai vittu
Moondram naal jeevanodelunthitta devan
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘யாருக்குத் தான் தெரியும் – Yaarukku than theriyum’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song highlights themes of salvation and the power of Jesus, with references to His miracles and resurrection.
- Each verse describes different aspects of faith and divine intervention in human struggles.


