தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva Janame Paadi Thuthippom

Deal Score+1
Deal Score+1

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம் (2)
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) – தேவ

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றும் காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனை துதித்திடுவோம் – தேவ

3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம் – தேவ

4. தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம் – தேவ

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம் – தேவ

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

[சங்கீதம் 138:6]

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password