பல்லவி
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்
சரணங்கள்
1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத்
2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – தோத்
3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – தோத்
4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே – தோத்
5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – தோத்
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள்
காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும்
தீர்ப்புச்சொல்லாதிருங்கள்,
இருளில் மறைந்திருக்கிறவைகளை
அவர் வெளியரங்கமாக்கி,
இருதயங்களின் யோசனைகளையும்
வெளிப்படுத்துவார்;
அப்பொழுது அவனவனுக்குரிய
புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Therefore judge nothing before the time,
until the Lord come,
who both will bring to light
the hidden things of darkness,
and will make manifest the counsels
of the hearts:
and then shall every man have praise of God.
ICorinthians, I கொரிந்தியர் 4:5