மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் – Magilvom Yesuvil Magilvom Paran

மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் – Magilvom Yesuvil Magilvom Paran

மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்
மகிமை யுற்றுமே மகிழ்வோம்

அனுபல்லவி

மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ – மகிழ்

சரணங்கள்

1. வானில் யாவரும் மகிழ – இயேசு
வாருமே என்றுமே பகர
மாறுவோர்க்கொரு சிகரம் – மன
தாரத் தற்பனதருள
மகிமை, கனமும், மகிமையில் மிகவும் மகிழ – மகிழ்

2. சுத்த ஜீவனுடைய – தேவ
புத்திரர் துலங்கிடவே
சர்வ சிருஷ்டிகளுடைய – மகா
கர்மங்கள் அகன்றகல
மகிழும் தினமும், மகிபரின் தினமும் வரவே – மகிழ்

3. அடிமையானவர் கூடி – பரன்
அளித்த பொன் முடி சூடி
ஆயிரமாண்டுகளாகக் கடன்
மாறியே அரசாள்
மயிலும், குயிலும் ஆடும் புலியுடன் வாழ – மகிழ்

4. வானம் பூமியுமகல – நவ
வானம் பூவுமே நிகழ
சாபம் பாவமும் சகல – கடும்
ரோக மோடியே விலக
சுகமும், ஜெபமும், சகலரும் சகித்து மகிழ – மகிழ்

5. பொன்னால் வீதிகளுடைய – அரும்
சொல்லால் உரைப்பதற்கரிய
மின்னும் வச்சிர வொளியே – நரர்
கண்டு களித்திடு மகலே
கண்ணீர் கவலையும் நண்ணா நகரில் மகிழ – மகிழ்

6. பளிங்கு போல் ஜீவ நதியே – இரு
கரையும் ஜீவனின் மரமே
பசியும் தாகமுமில்லையே – அங்கு
புசிக்க ஜீவனின் கனியே
புசிப்போம், ருசிப்போம் இயேசுவில் நித்தியம் மகிழ – மகிழ்

7. சுத்த ஆவியும் சுதனும் – செய்த
மீட்பின் செயலைப் பரனும்
மற்றும் தூதர் கணமும் அங்கு
உற்று உள்ளம் மகிழ
போற்றிப் புகழ்வோம், தூதர் செயலில் மகிழ – மகிழ்

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
1 Comment

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo