Tamil Christian Worship Medley

Faith Score+1
Faith Score+1

Tamil Christian Worship Medley

01.மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் என்னை நினைத்து இதுவரை நடத்தினீரே – 2-
நன்றி நன்றி ஐயா கோடிகோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானய்யா இதுவரை உதவினீரே எல்ரோயி எல்ரோயி என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் – 2 ( நன்றி )

02. வெண்மையானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி ஆனந்த தைலமே பனிபோல பெய்யும் பரிசுத்தரே மழையாக பொழியும் ஆவியே ஆவியே
ஆவியே மழையாக பொழியும் ஆவியே -2

03. எந்த பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்று பேசுவார் -2
இறுதிவரை எப்போதும் நடத்துவார் -2
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம் ஆமென் அல்லேலூயா -4

04. எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர் நன்றி நன்றி ஐயா
என் பாரங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே -2 (எனக்காகவே)

05. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – 2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை -2
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் -2

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் – 2

06. என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே -2

நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் -2
-என்னை விட்டு

07. ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

08. தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்ய நாமத்தில்
இன்பமுடன் கூடி வந்தோம் -2

09. உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே – 2

10. அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
உன் அனுக்கிரகம் தரவேண்டுமே- 2
என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

11. உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி
யாரும் இல்லையப்பா – 2
அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம்
இயேசப்பா – 2

12. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

13. உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்

14. அநாதி ஸ்நேகம் – (3)
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்
பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம்-2

15. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
நன்றிபாடல் தினமும் பாடுவோம்
நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம்-2

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்

16. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

17. பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்

18. ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)

19. குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..
மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை -2
எனை யோசித்திரே எனை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 (தடுமாறும்)

20. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே-2
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே -2

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா

21. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

22. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

23. நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே-2

இயேசயா என் இயேசயா -4

24. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

25.தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட
இருக்கும் துணையுமானார்
பூமி நிலை மாறி
மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்

26. எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே -2

27. உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா

28.என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளர்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர்
இயேசுவே – (4)

29. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் -2

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

30. தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ -2

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் – 2

31. ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்
இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ

32. தேற்றிடும் தெய்வமே
திடன் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே -2
உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே -2

33. திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் – 2

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் – 2
திருப்பி தர ஒன்றும் இல்லையே

34. தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)
தாயினும் மேலாக அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)
மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2
உன் நம்பிக்கையை விட்டு விடாதே
நீ நம்பினவர் கைவிட மாட்டார் (2)

35. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர் -2

உம்மால் ஆகும், எல்லாம் ஆகும்

ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல -2

36.ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே முழு
உலகத்திற்கும் பொதுவான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே

இயேசு நீர் மாத்திரமே -2

37. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா

38. சாரோனின் ரோஜாவும் நீரே பள்ளத்தாக்கின் லீலி நீரே -2

என் அன்பே என் உயிரே என் பிரியமே என் இயேசு நீரே -2

அழகே -3 என் இயேசுவே

39. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் – (2)

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் – (2)

40. என்ன நான் செலுத்திடுவேன்
ஆயிரம் பாடல்களோ
என் உயிர் காலம் முழுதும்
இரட்சிப்பை உயர்த்திடுவேன் – 2

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

Tamil Worship Medley Song List

1. Marawamal Ninaitheeraiya  – Fr.S.J. Berchmans
2. Pani pola peiyum-Rev.Dudley Thangaiah
3.Karampidithu vali nadathum-Fr.S.J. Berchmans
4. Enakkakve yavaiyum – Ps.Chandrasekar
5. Manathurugum deivame – Fr.S.J. Berchmans
6. Ennai vittu kodukaathavar – Ps.Davidsam Joyson
7. Aalukai seiyum aaviyanavare – Fr.S.J. Berchmans
8. Deva presannam tharume – Sis.Sarah Navaroji
9. Umakku Piriyamanthai seiya  – Fr.S.J. Berchmans
10. Anuthinamum ummil naan – Rev.Dr.Ezekiel George
11. Ummaithan nampiyirukirom – Ps.Davidsam Joyson
12. Naatha um thirukarathil – Fr.S.J. Berchmans
13. Abhisheka olivamaram -Ps.Joseph Aldrin
14. Anathi sneham – Bro.G.Jacob
15. Aaravaram aarpatam – Fr.S.J. Berchmans
16. Aaruthalin Deivame- Fr.S.J. Berchmans
17. Anpin Deivame – Ps.K.S.Wilson
18.Raaja Neer seitha namaikal – Fr.S.J. Berchmans
19. Thadumarum kaalkalai – Ps.Alwin Thomas
20. Umakku mahimai – Fr.S.J. Berchmans
21. Sthothira bali sthothira bali – Fr.S.J. Berchmans
22. En Inba Thunba neram – Rev.M.Rajendran
23. Naan azhutha pothellam – Ps.Easak Kumar
24. Thaai madiyil – Fr.S.J. Berchmans
25.  Devan namathu adaikalamum – Fr.S.J. Berchmans
26. Enniladanga – L.S.Thiyakarajan
27. Unka kiruba illama vaala – Ps.Lucas Sekar
28. Pesum Deivame – Sis.Padma Mudaliyar
29.  Yaar ennai kai vittalum -Fr.S.J. Berchmans
30. Thanimaiyin paathaiyil – Ps.Moses Rajasekar
31. Aarparippom Aarparippom – T.G.Sekar
32. Parisutha aaviye – Fr.S.J. Berchmans
33. Thirumpi paakiren vantha – Ps.Johnsam Joyson
34.  Thaai kooda pilllaikalai – Br.Peter Malairaj
35. Aahathathu Ethuvumilla – Fr.S.J. Berchmans
36. Aarathaniku thakuthiyama deivam- Bro.Agathiyan
37. Nandri Nandri nandri endru – Fr.S.J. Berchmans
38. Alagae En Yesuve – Jerushan Amos
39. Paralogame ummai – Ps.Chandrasekar
40. Isravelin Rajave – Ps.Issac William

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo