இறைவன் இணையற்ற இசைக்கலைஞன் – Iraivan Inaiyattra Isaikalaingan
இறைவன் இணையற்ற இசைக்கலைஞன் – Iraivan Inaiyattra Isaikalaingan
இறைவன் இணையற்ற இசைக்கலைஞன்
இசைத்தான் இயற்கையின் இயல்பினிலே
இளந்தென்றல் இனிமையிலே
இரைந்திடும் இறையொலியை
இதமாய், இசையாய், இழைத்தான்
இறையே இசையாய் இசைந்திடவே
காற்றின் மௌனத்திலும் மெல்லிசை மறைத்தான்
காந்தள் மலர்தலிலும் நுண்ணிசை நுழைத்தான்
முகிலும் வேலியும் புணரும் இசை மழையாக்கினான்
மழுவும் நிலம் வருடும் இசை அலையாக்கினான்
இறையே இசையானான் இயற்கையிலே
தாயின் உதரத்திலும் உயிரிசை ஒளித்தான்
தாங்கும் தரணியிலும் மண்ணிசை விதைத்தான்
உலகும் உறவும் கூடும் இசை உணர்வாக்கினான்
உடலும் உளமும் உருகும் இசை உயிராக்கினான்
இறையே இசையானான் இயற்கையிலே
இயல் & இசை: அருள்பணி. ஜோசப் அரா க.ச.
Iraivan Inaiyattra Isaikalaingan song lyrics in english
Iraivan Inaiyattra Isaikalaingan
Isaithaan iyarkkaiyin iyalbinilae
ilanthentral inimaiyilae
Irainthidm Iraiyoliyai
Ithamaai Isaiyaai Izhaithaan
Iraiyae Isaiyaai Isainthidavae
Kattrin Mounathilum mellisai maraithaan
Kaanthal malarthalilum nunnisai nulaithaan
Mugilum vealiyum punarum isai mazhaiyakkinaan
Mazhuvum Nilavum Varudum Isai Alaiyakkinaan
Iraiyae Isaiyanaan Iyarkkaiyilae
Thaayin Utharathilum Uyiridai olithaan
Thaangum Tharaniyilum Mannisai vithaithaan
Ulagum Uravum Koodum Isai Unarvaakkinaan
Udalum Ullamum Urugum Isai Uyirakkinaan
Iraiyae Isaiyanaan Iyarkkaiyilae
- ஜெய ஜெய ராக்கினியே – Jeya Jeya Rakiniye
- ஆலய மணி ஓசை கேளுங்கள் – Alaya Mani Oosai Kealungal
- கல்வாரியே கல்வாரியே – Kalvariye Kalvariye
- தாவீதின் மகனுக்கு ஓசான்னா – Thaveethin Maganukku Osanna
- ஆயனைத் தேடும் ஆடுகளே – Aayanai Theadum Aadugalae
- என் சுவாசக் காற்றே என் – En Swasa Kaatrae
- அர்ப்பண மலராய் வந்தேன் – Arpana Malaraai Vanthean
- நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Varthaikku
- உம் பணிவாழ்வையே எங்கள் – Um Pani Vaalvaiyae Engal
- சரணாலயம் சரணாலயம் – Saranalayam Saranalayam