கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே -Karthavin janame kaithalamudane
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே -Karthavin janame kaithalamudane
பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்
1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) – கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) – கர்த்தாவின்
- வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu
- Kannimari Palanai – Merry Merry Merry கிறிஸ்மஸ்
- அன்பு உள்ளம் கொண்டவரே – Anbu ullam kondavarey
- பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
- உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன் – Umakaagavae Naan Uyirvazhgiraen
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
So he drove out the man; and he placed at the east of the garden of Eden Cherubims, and a flaming sword which turned every way, to keep the way of the tree of life.
ஆதியாகமம் | Genesis: 3: 24