இரட்சிப்பட்ட ஒருவன் பாவத்திலிருந்து – Ratchikkpatta Oruvan paavathilirunthu
இரட்சிப்பட்ட ஒருவன் பாவத்திலிருந்து தன்னை பிரித்துக் கொள்ள வேண்டும்.
A saved person must separate himself from sin.
சபை என்பது இரட்சிக்கப்பட்டவர்களுடைய ஒரு குழுவாகும். ஒருவன் இரட்சிக்கப்படுவதற்கு முன் அவன் ஒரு குறிப்பிட்ட மதத்திலோ அல்லது ஏதாவது ஒரு சபைப் பிரிவிலோ இருக்கலாம். ஆனால் அவன் இரட்சிக்கப்படும்போது, அவன் ஒரு தேவனுடைய பிள்ளையாக மாறுகிறான். ஒரு தேவனுடைய பிள்ளை, மற்றத் தேவனுடைய பிள்ளைகளோடு ஐக்கியமாக இருக்க வேண்டியது மிக முக்கியமான தாகும். ஆகவே, அவர்களுடைய முந்தின கூட்டாளிகளிடமிருந்துள்ள ஒரு பிரிவினையும் அவிசுவாசிகள் மற்றும் பாரம்பரிய சடங்காச்சாரங்களி லிருந்துள்ள ஒரு பிரிவினையும் தேவைப்படுகிறது. வேதாகமம் கூறுகிறது. “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொண்டு,உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்; நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமா யிருப்பீர்களென்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.” (2 கொரி. 6:17,18). தவறான போதகர்கள் மற்றும் அவர்கள் போதனைகளிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். உலகம் தேவனோடு பகையாக இருப்பதால் நாமும் அதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் (1) 2:15-17; / 15:18,19; नं 12:1,2).


