நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம் -Neethiyin Sooriyan Neethiyin Velicham

Deal Score+3
Deal Score+3

Lyrics:

நீதியின் சூரியன் நீதியின் வெளிச்சம்
நிச்சயமாய் உதிப்பார்
சரிகட்டும் தேவன் சமாதானக் கர்த்தர்
நிச்சயம் பதில் அளிப்பார்

உன் நியாயத்தை விசாரித்து துரிதமாய் நீதி செய்வார் -4

விடுதலை நாயகன் விண்ணப்பம் கேட்பவர்
நிச்சயம் விடுவிப்பார்
தனியான வாழ்க்கையை திக்கற்ற நிலைமையை – உன்
நிச்சயம் மாற்றிடுவார்

வனாந்திர நேசத்தை இளமையின் பக்தியை-உன்
நிச்சயம் நினைத்தருள்வார்
சுமந்த சிலுவைக்கு சிந்தின கண்ணீருக்கு – நீ
நிறைவான பலன் தருவார்

பொறுத்த அநீதியை சகித்த நெருக்கத்தை – நீ
மனதில் வைத்திருப்பார்
குறித்த நேரத்தில் தயைசெய்யுங் காலத்தில்-அவர்
உயர்த்தி மகிழ்ந்திடுவார்

நீதியின் தேவன் நிந்தையின் வழக்கை
நிச்சயம் விசாரிப்பார்
கண்ணீரைக் காண்பவர் நிந்தைக்கு பதிலாக – உன்
நன்மையை சரிகட்டுவார்

உண்மையின் தேவன் உச்சித ஆசியை
உனக்காக வைத்திருப்பார்
நீதியாயிருப்பவர் நிலையான வீட்டை – உன்
நிச்சயமாய்க் கட்டுவார்

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password