யோவான் – 6

Faith Score0
Faith Score0

யோவான் – 6
1. இவைகளுக்குப்பின்பு இயேசு எங்கே போனார்? திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
2. திரளான ஜனங்கள் எதைக் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்? அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களை.
3. இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே யாருடனேகூட உட்கார்ந்தார்? தம்மு டைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 
4. அப்பொழுது எது சமீபமாயிருந்தது? யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா  சமீபமாயிருந்தது. 
5. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, யார் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டார்? திரளான ஜனங்கள். இயேசு பிலிப்பை நோக்கி என்ன கேட்டார்? இவர் கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்றுகேட்டார். 
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், ஏன் அப்படிக் கேட்டார்? அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 
7. பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ் சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், எத்தனை பணத்து அப்பங்களும் இவர் களுக்குப் போதாதே என்றான்? இருநூறு பணத்து.
8. அப்பொழுது யார் அவரை நோக்கினான்? அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கினான். அவரை நோக்கி சொன்னது என்ன?

9. இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.

10. இயேசு என்ன சொன்னார்? ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் எப்படிப்பட்டதாயிருந்தது? மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்? ஐயாயிரம் பேராயிருந் தார்கள்.
11. இயேசு அந்த அப்பங்களை எடுத்து, என்ன செய்தார்? ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? பந்தியிருந்தவர்க ளுக்குக் கொடுத்தார்கள். அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.
12. அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிச் சொன்னது என்ன? ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கை களைச் சேர்த்துவையுங்கள் என்றார். 
13. அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர் கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே எத்தனை கூடைகளை நிரப்பி னார்கள்? பன்னிரண்டு.
14. இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு என்ன சொன்னார்கள்? மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
15. ஆதலால் இயேசு எதை அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின் மேல் ஏறினார்? அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று அறிந்து.
16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் எங்கே போனார்கள்? கடற் கரைக்கு.
17. படவில் ஏறி, எங்கே போனார்கள்? கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூ முக்கு நேராய்ப்போனார்கள். அப்பொழுது இருட்டாயிருந்தது, யார் அவர்களி டத்தில் வராதிருந்தார்? இயேசு.

18. எதனாலே கடல் கொந்தளித்தது? பெருங்காற்று அடித்தபடியினாலே.

19. அவர்கள் எப்போது இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்? ஏறக்குறைய மூன்று நாலுமைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது.
20. அவர்களை இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? நான் தான், பயப் படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவர்கள் என்ன செய்ய மனதாயிருந்தார்கள்? அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள். உடனே படவு எதைப் பிடித்தது? அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் என்னவென்று அறிந் தார்கள்? அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் பட வில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.
23. கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் எங்கிருந்து வேறே படவுகள் வந்தது? திபேரியாவிலிருந்து.
24. அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங் கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, எங்கே வந்தார்கள்? கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
25. கடலின் அக்கரையிலே அவர்கள் யாரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்? இயேசுவைக் கண்டபோது.
26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதி னால் அல்ல, எதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தி யானதினாலேயே.
27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, எதற்காகவே கிரியை நடப்பியுங் கள்? நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே. அதை யார் உங்களுக்குக் கொடுப்பார்? மனுஷகுமாரன். அவரைப் பிதாவாகிய தேவன் என்ன செய்திருக்கிறார் என்றார்? முத்திரித்திருக்கிறார் என்றார்.
28. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: யாருக்கேற்ற கிரியைகளை நடப்பிக் கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள்? தேவனுக்கேற்ற கிரியை களை.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எது தேவனுக்கேற்ற கிரியை என் றார்? அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை யாயிருக்கிறது என்றார்.
30. அதற்கு அவர்கள் கேட்ட கேள்வி என்ன? அப்படியானால் உம்மை விசுவா சிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக் கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 
31. வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் எதைப் புசித்தார் களே என்றார்கள்? மன்னாவை.
32. இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை யார் உங்க ளுக்குக் கொடுக்கவில்லை? மோசே. யார் வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் பிதா.
33. வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பம் எது என்றார்? தேவன் அருளிய அப்பம் என்றார்.
34. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.
35. இயேசு அவர்களை நோக்கி யார் அந்த ஜீவஅப்பம் என்றார்? ஜீவஅப்பம் நானே என்றார். யார் ஒருக்காலும் பசியடையான்? என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். யார் ஒருக்காலும் தாகமடையான்? என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
36. நீங்கள் என்னைக் கண்டிருந்தும் என்ன என்றும் உங்களுக்குச் சொன்னேன்? விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
37. எது என்னிடத்தில் வரும்? பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னி டத்தில் வரும். யாரை நான் புறம்பே தள்ளுவதில்லை? என்னிடத்தில் வருகிற வனை.
38. என் சித்தத்தின்படியல்ல, எதைச் செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்? என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே.
39. என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது எது? அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவை களை எழுப்புவது. 
40. யார் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்பு வதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்? குமார னைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன். 
41. எதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்தார்கள்? நான்  வானத் திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம்.
42. யூதர்கள் இயேசுவைக்குறித்து முறுமுறுத்து சொன்னது என்ன? இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே என்ன செய்ய வேண்டாம்? முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் யாரிடத்தில் வரமாட்டான்? என்னிடத்தில் வரமாட்டான். கடைசிநாளில் நான் அவனை என்ன செய்வேன்? எழுப்புவேன்.
45. எல்லாரும் தேவனாலே என்ன செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தீர்க்கதரி சிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே? போதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகை யால் யாரிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்? பிதாவினிடத்தில்.
46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் யாரைக் கண்ட தில்லை? பிதாவைக் கண்டதில்லை. இவரே யாரைக் கண்டவர்? பிதாவைக் கண்டவர்.
47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு எது உண்டென்று மெய்யா கவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? நித்தியஜீவன்.
48. எது நானே என்றார்? ஜீவ அப்பம் நானே.
49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே எதைப் புசித்திருந்தும் மரித்தார்கள்? மன்னாவை.
50. யார் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே? இதிலே புசிக்கிறவன். 

51. வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்? இயேசு. யார் என்றென்றைக்கும் பிழைப்பான்? இந்த அப்பத்தைப் புசிக்கிறவன். நான் கொடுக்கும் அப்பம் எது என்றார்? உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
52. அப்பொழுது யூதர்கள் என்ன என்று தங்களுக்குள்ளே  வாக்குவாதம் பண்ணி னார்கள்? இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று.

53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத் தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந் தால் உங்களுக்குள்ளே எது இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? ஜீவனில்லை.
54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு எது உண்டு? நித்தியஜீவன் உண்டு. நான் அவனை எப்போது எழுப்புவேன்? கடைசி நாளில் எழுப்புவேன்.
55. எது மெய்யான போஜனமாயிருக்கிறது? என் மாம்சம். எது மெய்யான பானமாயிருக்கிறது? என் இரத்தம். 
56. யார் என்னிலே நிலைத்திருக்கிறான்? என் மாம்சத்தைப் புசித்து, என் இரத் தத்தைப் பானம்பண்ணுகிறவன். நானும் அவனிலே என்ன செய்திருக்கிறேன்? நிலைத்திருக்கிறேன்.
57. யாரைப்போலவும், எதைப்போலவும் என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்? ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவி னால் பிழைத்திருக்கிறதுபோலவும்.
58. எது இதுவே? வானத்திலிருந்திறங்கின அப்பம். இது எதைப்போலல்ல? உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல. அவர்கள் என்ன ஆனார்கள்? மரித்தார்கள். இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் எப்படியி ருப்பான் என்றார்? பிழைப்பான் என்றார்.
59. எங்கே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்? கப்பர்நகூமி லுள்ள ஜெபஆலயத்திலே.
60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, என்னவென்று சொன்னார்கள்? இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார் கள்.
61. என்னவென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்க ளுக்கு இடறலாயிருக்கிறதோ என்றார்? சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக் கிறார்களென்று.
62. எதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை.
63. உயிர்ப்பிக்கிறது எது? ஆவி. எது ஒன்றுக்கும் உதவாது? மாம்சம். நான் உங்க ளுக்குச் சொல்லுகிற வசனங்கள் எப்படி இருக்கிறது? ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

64. ஆகிலும் உங்களில் யார் சிலர் உண்டு என்றார்? விசுவாசியாதவர்கள். யார் இன்னாரென்றும், யார் இன்னாரென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தார்? விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும். அவர் பின்னும்:

65. ஒருவன் யார் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்? என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால்.
66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் என்ன செய்தார்கள்? அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
67. அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி கேட்டது என்ன? நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
68. சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், எவைகள் உம்மிடத்தில் உண்டே? நித்தியஜீவ வசனங்கள்.
69. நீர் யார் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்? நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. 
70. இயேசு அவர்களை நோக்கி: யாரை நான் தெரிந்துகொள்ளவில்லையா? பன்னிருவராகிய உங்களை. உங்களுக்குள்ளும் ஒருவன் யாராயிருக்கிறான் என்றார்? பிசாசாயிருக்கிறான் என்றார்.
71. யார் பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்? சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo