
நமக்கொரு பாலகன் பிறந்தாரே – Palagan Pirandharae Christmas Song Lyrics
நமக்கொரு பாலகன் பிறந்தாரே – Palagan Pirandharae Tamil Christmas Song Lyrics Sung By. P. Jabez Philip.
Palagan Pirandharae Christian Song Lyrics in Tamil
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே
நாமம் அதிசயமானவரே (2)
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
1. பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய்
இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே
மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில்
மானிடனாய் வந்து அவதரித்தாரே (2)
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே – கர்த்தத்துவமே…
2. ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே
தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே
மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே
கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே! (2)
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே
பாவம் போக்க சாபம் நீக்க
தூய்மையாக்க நம்மை மீட்க
பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே
எல்லா மேன்மையும் துறந்த நாள்
அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள்
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
#christianmedias
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘Palagan Pirandharae’ sung by P. Jabez Philip.
- The lyrics celebrate the birth of Jesus and emphasize his divine nature.
- Repeated phrases signify joy and gratitude for the gift of Jesus.
- The song features themes of salvation, grace, and the importance of Jesus’ birth.
Estimated reading time: 2 minutes


