Paraloga Thoodhergal Padida – பரலோக தூதர்கள் பாடிட
பரலோக தூதர்கள் பாடிட
பூலோக மேய்ப்பர்கள் வியந்து பார்க்க
இயேசு பாலனாய் பாரில் வந்துதித்தார்
உன்னதத்திலே தேவனுக்கு மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் அந்நேரம் உண்டாயிற்று
1.தூதர்கள் செய்தியை மேய்ப்பர்கள் கேட்டு
துரிதமாக பெத்லகேம் சென்று
தூய பாலனை பணிந்து போற்றினர் – உன்னதத்திலே
2.அதிசயமானவராய் பிறந்தார்
ஆலோசனை கர்த்தராய் உதித்தார்
நம்மை வாழவைக்க வந்துதித்தார் – உன்னதத்திலே
