போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு
பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..

ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம்

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ (நீ )
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame via @christianmedias

Leave a Comment

0 Shares
Share via
Copy link