வாழ்க்கையில வியாதி மாற – To change illness in life
நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி எடுக்க வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் நோக்கம்
இன்றைக்கு நம்ம எடுக்க போற பகுதி என்னன்னு பாத்தீங்கன்னா வியாதி.
வியாதியில இருந்து வெற்றி எடுக்க முடியுமா என்று கேட்டா நிச்சயமா வெற்றி எடுக்க முடியும் என்று இந்த வேதம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.
அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் என்று நம்ம எல்லாருமே அந்த வசனத்தை அறிந்திருக்கிறோம்.
அவர் நம்மளோட வியாதி எல்லாவற்றையும் 2000 வருஷத்துக்கு
முன்பாகவே போக்கிவிட்டார் என்று நமக்கு நல்லா தெரியும்.
தெரிந்தும் அறிந்தும் ஏன் வாழ்க்கையில வியாதி நம்மளை விட்டு மாறாம இருக்குது என்று பார்த்தால் அவர் எல்லாவற்றையும்
செய்து முடித்து சில காரியங்களை மாத்திரம் நம்ம கொஞ்சம் செய்யணும்னு விட்டுட்டு போயிருக்கிறார்.
அதுல ஒரு காரியம்தான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அந்த காரியத்தை நீங்க செய்யும் பொழுது நிச்சயமா வியாதி இல்லைங்க. நீங்கதான் வெற்றி எடுக்க போறீங்க. ஆரோக்கியமா
வாழ போறீங்க. அது என்னன்னு பார்க்கலாமா?
நீதி மொழிகள் 14 ஆம் அதிகாரம் அதனுடைய 30 வது வசனம் இப்படியாய் சொல்லப்பட்டிருக்கிறது.
சொஸ்த மனம் உடலுக்கு ஜீவன் பொறாமையோ எலும்பு உருக்கி என்று. நல்லா யோசிச்சு பாருங்க ஒரு சுகாதாரமற்ற இடத்தில நீங்க வாழ்ந்தாலோ இல்ல அந்த இடத்தில இருக்கிற உணவு பொருட்களை நீங்க சாப்பிட்டாலோ உங்க சரீரத்துல நிச்சயமா வியாதி வரும்ல்ல அதேபோல நம்மளுடைய இருதயம் சுத்தமா இல்லனாலும் வியாதி நம்மளை மேற்கொள்ள ஆரம்பிக்குங்க
இந்த சொஸ்த மனதிற்கு இருக்க வேண்டிய மூன்று அம்சங்கள் என்னன்னு பாத்தீங்கன்னா
பீஸ்புல் ஹார்ட் அ
கண்டென்ட் ஹார்ட் அரீ
ஆப் என்வி ஹார்ட்
அப்படின்னா உங்க இருதயம் சமாதானமா இருக்கணும்.
மனரம்மியமா இருக்கணும் பொறாமை இல்லாம இருக்கணும்.
எப்பயுமே உங்க இருதயம் கவலையினாலும் பயத்தினாலும்
கலக்கத்தினாலும் இருந்துச்சுன்னா உங்க இருதயம் சமாதானமான நிலையில இல்லன்னு அர்த்தம்.
வாழ்க்கையில எனக்கு இது வேணும் அது வேணும் இன்னும் இப்படி இருந்தா நல்லா இருக்கும் அப்படி இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு எப்பயுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தா உங்க இருதயம் மனரமியமா இல்லை என்று அர்த்தம்.
பிறர் உங்களை விட அதிகமா வளர்ந்துட்டா அவங்களை பார்த்து
பொறாமைப்பட்டா உங்க இருதயம் நல்ல நிலைமையில இல்லை என்று அர்த்தம்.
இவைகளை நாம் நிச்சயமாக சரி பார்க்க வேண்டும். கர்த்தர் அப்படித்தாங்க நம்மளை உருவாக்கி இருக்கிறார். உள்ளுக்குள்ள நல்ல இருதயம் இருக்குமானால் அது வெளியில ஆரோக்கியமாக
வெளிப்படும். அதனாலதான் யோவான் சொல்றாரு பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும்
வாழ்ந்து சுகமாய் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்
என்று. அப்படின்னா உள்ளுக்குள்ள சுகமா இருக்குமானால் வெளியில எல்லாமே செழிப்பா மாறும் ஆரோக்கியமா இருக்கும். தீர்காயசாஅது வெளிப்படும்.
இயேசு கிறிஸ்து கடைசியாக இந்த பூமியிலிருந்து பரத்துக்கு ஏறுவதற்கு முன்பாக நமக்கு அவர் சமாதானத்தை பரிசாக
கொடுத்துவிட்டு போனார்.
உங்களுக்கு ரொம்ப பிரியமானவங்க ஒரு கிப்ட் கொடுத்தா அந்த கிப்ட நீங்க எவ்வளவு பத்திரமா பாதுகாப்பீங்க. அதை எவ்வளவு அழகா பயன்படுத்துவீங்க. அதேபோல இயேசு கிறிஸ்து சமாதானத்தை உங்களுக்கு ஒரு கிப்டா கொடுத்துட்டு போயிருக்கிறார்.
அதை உங்க இருதயத்தில நீங்க பாதுகாத்து அதை சரியா நீங்க
பயன்படுத்துனீங்கன்னாதான் அவருடைய கிப்ட நீங்க அங்கீகரிக்கிறீங்கன்னு அர்த்தம்.
உங்க இருதயம் எப்பொழுதுமே கலங்கி கொண்டிருந்துச்சுன்னா
உங்க இருதயம் சுத்தம்ல்லாமல் இருந்துச்சுன்னா அவருடைய கிப்ட நீங்க நிராகரிக்கிறீங்கன்னு அர்த்தம்.
இன்னைக்கு நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற
ஆலோசனை என்னன்னா நம்ம வாழ்க்கையில எல்லா காரியத்தையும் நம்ம மெயின்டைன் பண்றோம். ஒரு போன் வாங்குனா அதை மெயின்டைன் பண்றோம்.
ஒரு காரை மெயின்டைன் பண்றோம்.
ஒரு பைக்க மெயின்டைன் பண்றோம்.
இன்னைக்கு உங்க இருதயத்தை நீங்க மெயின்டைன்
பண்ணீங்கன்னா அதாவது இந்த நிலையில எல்லாம் என்னுடைய இருதயம் சரியா இருக்குதா என்று நீங்கள் சரி பார்த்தீர்களானால்
இதுவே உங்களுக்கு இம்மயூன் பவராக அதாவது நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட போகிறதுங்க. இன்னைக்கு நீங்க
ஜெபத்தில நாலு விஷயங்களை கேட்கணும்.
கர்த்தாவே உங்களைமுழு இருதயத்தோடு விசுவாசிக்கிற ஒரு இருதயம் யார் என்ன புண்படுத்தினாலும் அதை உடனே மன்னித்து மறக்கிற ஒரு இருதயம் நீங்க எனக்கு கொடுத்திருக்கிற வாழ்க்கை அது போதுமானது என்ற மனரம்மயமான ஒரு இருதயம் யார் மேலயும் பொறாமைப்படாத ஒரு இருதயத்தை ஒரு சுத்த இருதயத்தை தாவீதை போல நீங்க கேளுங்க
நீங்க கேட்டீங்கன்னா நிச்சயமா கர்த்தர் தருவார் அவர்
விரும்புகிற அம்சங்கள் உங்க இருதயத்தில் வருமானால் இருக்கிற
வியாதியும் உங்களை விட்டு மாறிடும் இனி எந்த வியாதியும் உங்களை அண்டாதபடிக்கு கர்த்தரை நிச்சயம் பாதுகாப்பாருங்க
நீங்க ஆரோக்கியமா சந்தோஷமா தீர்க்காயுசோடு நிச்சயமா வாழ்வீங்க அதுவே இயேசு கிறிஸ்துவுடைய நோக்கமாய்
இருக்கிறது. இன்றைக்கு இந்த வியாதியில இருந்து நீங்க வெற்றி எடுங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் காட் பிளஸ் யூ ஆல்.

