Bible வாக்குத்தத்தம் – Bible Message
.
1. சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் அவன் உண்டாக்கிய இரு
தூண்களின் பெயர் என்ன?
.
2. தாவீது இஸ்ரவேலை தொகையிட்டதினால், கர்த்தர் வரப்பண்ணின
கொள்ளை நோயினால் மடிந்தவர்கள் எத்தனை பேர்?
.
3. கர்த்தரிடத்திற்கு தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும்
செய்ய தன் மனதை சாய்த்த யூதாவின் இராஜா யார்?
.
4. வேதபாரகனாகிய எஸ்றாவை தேவாலயத்தை கட்டும்படி அனுப்பிய
ராஜா யார்?
5. யோசேப்புக்கு பார்வோன் இட்ட பெயர் என்ன?
.
II. ‘வேதாகம படத்தை பாருங்கள் – பதிலை கூறுங்கள்’
=======================================
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். – இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்?
.
..
1. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்?
.
சரியான பதில் : இஸ்ரவேல் வம்சமே – (ஏசாயா 5:7)
.
2. மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். ஆனால் இதுவோ அதை மகிழ்ச்சியாக்கும். எது?
.
சரியான பதில் : நல் வார்த்தையோ – ( நீதிமொழிகள் 12:25)
.
3. துஷ்டன் கலகத்தையே விரும்புகிறான். அவனுக்கு விரோதமாக யார் அனுப்பப்படுவான்?
.
சரியான பதில் : குரூர தூதன் – (நீதிமொழிகள் 17:11)
.
4. துன்மார்க்கன் எதினால் சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறான்?
.
சரியான பதில் : தன் பெருமையினால் (சங்கீதம் 10:2)
.
5. வானபரியந்தம் உயர்ந்ததும், பாதாளத்திலும் ஆழமானதும், பூமியைப் பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தை பார்க்கிலும் அகலமுமானது எது?
.
சரியான பதில் : தேவனின் ஞானம் (யோபு 11:7-9).
.
.
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு
வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, குருத்தோலைகளைப்
பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு:
ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா
ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். அல்லாமலும்:
சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா
கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற
பிரகாரமாக, இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல்
ஏறிப்போனார். – யோவான் 12:12-15

