இதய துடிப்பில் இணைந்து – Idhaya Thudipu Tamil Christian Song Lyrics Sung By. Madhan Mosses.
Idhaya Thudipu Christian Song Lyrics in Tamil
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !
நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !
உலக அன்பெல்லாம் – மறையும்
கானல் நீர் தானே
மறைந்ததும் இதயம் – உறையும்
வலியை உணர்ந்தேனே !
ஜீவத்தண்ணீர் உம்மில் கண்டு
தாகம் தீர்த்தேனே
நீரைக் கண்ட மானைப்போல
மகிழ்ந்து நின்றேனே !
எனது ஜீவன் இயேசு நீர்தானே
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !
கண்ணில் நீர் வழியும் – தருனம்
துடைத்து அணைத்தீரே
கால்கள் சருக்கும்போது – கிருபை
தாங்கி நடத்தியதே
கைகள் கோர்த்து நடக்கும்போது
வாழ்வு இனிக்கிறதே
வாழும் காலம் யாவும் உமது
உறவில் நிலைத்திடுவேன்
எனது உறவும் ஏசு நீர்தானே!
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே
துடிக்கும் இதய துடிப்பில் – என்றும்
உமது வார்த்தை ஒலிக்குதே !
நிமிடம் கூட விலகும் போது
திரும்பி வரவும் ஏங்குதே!
நிலத்தில் விழுந்த மீனைப்போல
எனது மனமும் துடிக்குதே !
உமது இதய துடிப்பில் இணைந்து
எனது இதயம் துடிக்குதே !!
இதய துடிப்பில் இணைந்து lyrics, Idhaya Thudipu lyrics, Christian Song Lyrics
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இதய துடிப்பில் இணைந்து – Idhaya Thudipu’.
- The song expresses a deep connection between the heart and faith in Jesus.
- It highlights themes of longing, divine love, and spiritual fulfillment throughout the lyrics.
- The lyrics depict feelings of thirst for Jesus and joy in spiritual companionship.
Estimated reading time: 2 minutes


