இதயமே நீ கலக்கம் ஏன் – Idhayame Nee Kalakkam Yean
இதயமே நீ கலக்கம் ஏன் கொள்கிறாய்
காத்திடும் தேவன் உன்னிலே – 2
எங்கெங்கு சென்றாலும் உடன் இருக்கிறார்
என்னென்ன செய்தாலும் துணை இருக்கிறார்
இதயமே கலக்கம் கொள்வதேன் – 2
நீ போகும் பாதை இருளாகும் நேரம் வழியேதும் தெரியாமல் நீ வீழ்கையில் – 2
உறவெல்லாம் உனை விட்டு பிரிந்தெங்கோ செல்கையில்
துணை ஏதுமில்லாமல் பயம் சூழ்ந்து கொள்கையில்
உருவாக்குவார் வழிகாட்டுவார் தாயாக மார்போடு உனை அணைத்திடுவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் – 2
உடல் நோய்கள் உள நோய்கள் உனை வாட்டும் நேரம்
உடல் சோர்ந்து உளம் சோர்ந்து நீ சாய்கையில்
துயரமே வாழ்வென்று உளம் வாடும் வேளையில்
வலுவின்றி வாழ்வின்றி தள்ளாடும் பொழுதினில்
உனைத் தேற்றுவார் வலு ஊட்டுவார்
எந்நாளும் காக்கும் தெய்வம் உனைத் தாங்குவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் – 2
Idhayame Nee Kalakkam Yean song lyrics in english
Idhayame Nee Kalakkam Yean
Kaathidum Devan Unnilae -2
Engengu Sentralum Udan Irukkiraar
Ennenna Seithalum Thunai Irukkiraar
Idhaymae Kalakkam Kolvathean
Nee Pogum paathai Irulagum Nearam Vazhiyeathum Theriyamal Nee Veezhkaiyil -2
uravellam Unai Vittu Pirinthengo Selgaiyil
Thunai Yeathumillamal Bayam Soolnthu Kolgaiyil
Uruvakkuvaar Vazhi Kaattuvaar Thaayaga Maarbodu Unai Anaithiduvaar
Idhayamae Kalakkam Kolvathean -2
Udal Noaigal Ula Noaigal Unai Vaattum Nearam
Udal Soarnthu ullam Soarnthu Nee Saaikaiyil
Thuyaramae Vaazhventru Ulam Vaadum Vealaiyil
Valuvintri Vaalvintri Thalladum Poluthinil
Unai Theattruvaar Valu Oottruvaar
Ennalum Kaakkum Deivam Unai Thaanguvaar
Idhayamae Kalakkam Kolvathean -2

