Kalvari Siluvaiyile Lyrics – கல்வாரி சிலுவையிலே

Faith Score+1
Faith Score+1

Kalvari Siluvaiyile Tamil Christian Lent days song Lyrics – கல்வாரி சிலுவையிலே

கல்வாரி சிலுவையிலே
தொங்கின என் இயேசுவே
என் பாவத்தின் பலியாக
உம் ஜீவனைத் தந்தீரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

1. இரத்தத் துளிகள் வேர்வையாய் தெறிக்க
பாவி எனக்காய் ஜெபித்தீரே
உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப்போனேன்
மனங்கசந்து நான் அழுகின்றேன்

2. பாரசிலுவை தோளினில் சுமந்து
கொல்கொதா நீர் சென்றீரே
என் பாரங்களை என் வியாதிகளை
கோர சிலுவையில் சுமந்தீரே

3. கால்கள் கரங்களில் ஆணிகள் அறைய
உந்தன் இதயத்தில் ஈட்டி பாய
இரத்தம் வெள்ளமாக புரண்டோடிடுதே
என் உள்ளமும் உருகிடுதே

4. கல்மனம் கொண்ட பாவியாய் வாழ்ந்தேன்
கனிவாய் என்னை நேசித்தீரே
என் பாவங்களை நான் அறிக்கையிட்டேன்
என் வாழ்வினை அர்ப்பணித்தேன்

Kalvaari Siluvaiyile Lyrics,  Tamil Christian Lent days song Lyrics, கல்வாரி சிலுவையிலே பாடல் வரிகள்

Kalvari Siluvaiyile song Lyrics in English

Kalvari Siluvaiyile
Thongina En Yesuvae
En Paavathin Paliyaga
Um Jeevanai Thantheerae

Alleluya Alleluya
Alleluya Amen

1.Raththa Thuligal Vearvaiyaai Thearikka
Paavi Enakkaai Jebiththeerae
Ummai Maruthalithean Pinvaangi Ponean
Manam Kasanthu Naan Alukintrean

2.Paara Siluvai Thozinil Sumanthu
Golgotha Neer Sentreerae
En Paarangalai En Viyathikalai
Koara Siluvaiyil Sumantheerae

3.Kaalgal Karangalil Aanigal Araiya
Unthan Idhayathil Eetti Paaya
Raththam Vellamaaga Purandodithae
En Ullamum Urugiduthae

4.Kalmanma Konda Paaviyaai Vaalnthean
Kanivaai Ennai Neasithirae
En Paavangalao Naan Arikkaiittean
En Vaazhvinai Arpanithean

 

இப்போது ஒரு மன குழப்பத்தில் இருந்தேன் இந்தப் பாடலின் மூலமாக ஆண்டவர் இயேசு பேசினார் என்னுடைய பாவங்களுக்காக இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தருளினார்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூற எங்கள் வாழ்க்கையை மீண்டும் அர்ப்பணிக்க செய்கிறது

ஆண்டவருடைய பாடுகளை நினைவுகூரும் வகையில் பாடல்

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Kalvari Siluvaiyile’ (கல்வாரி சிலுவையிரே).
  • It expresses themes of repentance and Jesus’ sacrifice for humanity’s sins.
  • The song encourages listeners to reflect on their faith and dedicate their lives to Jesus.
  • The article includes links to various related resources for Tamil Christian songs.
  • Overall, the song serves as a reminder of Jesus’ life and sacrifice during Lent.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo