பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai
பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai
பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்
பாருங்கள் பாவையரே.
அனுபல்லவி
காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்
காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர்
சரணங்கள்
- பக்தர் பெருமான் இரு கைத்தலம் விரிக்கிறார்,
பாவியைப் போல் வாதை மேவி உத்தரிக்கிறார்;
பெத்தம் உளமனத்தார் கத்திக்கொக் கரிக்கிறார்,
பேதை மரி தன்மார்பில் மோதி ஆகுலிக்கிறார். – பாதகர் - கள்ளர், கயவர்பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,
காடி கலந்தகடற் காளானைத் திணிக்கிறார்;
வள்ளல் செவியுளைக்கும் வார்த்தைகள் பிணைக்கிறார்,
மாறுபா டுள்ள ரபி மார்புறக் கணிக்கிறார். – பாதகர் - கைவிட்ட தெனவென்று கலங்கிநின் றழுகிறார்,
காயுநின் மலன்கோபத் தீயினில் முழுகிறார்,
மையுற்ற கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;
வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார். – பாதகர்
4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,
மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர்
Paatharkkaai padu Paadukalai song lyrics in english
- கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae
- சிலுவை சுமந்தீர் – Siluvai Sumandheer Enakkaga
- பாவமில்லாத ஆட்டு குட்டி – Paavamillatha Aattu kutti
- பச்ச மரத்துக்கு எத்தனை – Pacha Marathuku Ethanai
- சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
