பார்த்தேனே பரனை – Parthaenae Paranai christian Salvation Army Tamil Songs lyrics
பல்லவி
பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்
ஏற்றாரே நரனை
அனுபல்லவி
உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்
சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்
சரணங்கள்
1. கல்வாரிமலையில் – முண்முடியைச்
சூண்டோராய்த் தலையில்
கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட
வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்
2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி
பூதலம் குலுங்க
நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்
கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்
3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்
பாதைக்குள்ளானோர்
பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்
பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! – பார்
4. ஓடுது இன்று – ஜீவ நதி
பாவிகட்கென்று!
பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்
பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் – பார்
பார்த்தேனே பரனை song lyrics, Parthaenae Paranai lyrics, Tamil songs, ratchaniya senai paadalgal
Partheanae Paranai song lyrics in English
Parthaenae Paranai Avar Anbaai
yeattaarae Naranai
Ullankaal Thuvangi Utchanthalai Mattum
Sollamudiyatha Ranavaathai patta naan
Kalvaari malaiyil mun mudiyai
Soondoraai Thalaiyil
Kai kaal VilaviniL Thiru Raththam Paainthoda
Vayaka thoorkka Maanda suthanai Naan
Seesharkal Kalanga Nilaimaari
Poothalam kulunga
Neesanai pola Intha masattra neasanaar
Koosamal Paadukal pattu maritharae
Vaathaikullaanor peayin thanthira
Paathaikullaanor
Pada vendiya paattai sadalanthnil anbaai
Pattu siluvaiyil Vettri Adainthonai
Ooduthu Intru Jeeva nathi
Paavikatkontru
Paavaththai Vittipo Thaavi Evar Paatham
Paavi Nee Vanthaal Un Saabangal Theerthidum
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil song ‘பார்த்தேனே பரனை – Parthaenae Paranai’.
- It includes sections such as the ‘Pallavi’ and ‘Anupallavi’, along with four verses.
- Translations of the lyrics into English are also available, presenting their meaning.
- The song expresses themes of love and salvation through its poetic verses.
Estimated reading time: 2 minutes


