கன்னி ஈன்ற செல்வமே – Kanni Yeentra Selvame
ஆ ஆரோ ஆ ஆரோ
ஆ ஆரோ ஆரிரோ ஆராரோ
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்
ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் தாங்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையேன்
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
வல்ல தேவ வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்
கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
ஆராராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ
https:/blog/palagan-pirandharae-christmas-song-lyrics/
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
