போற்றித் துதிப்பேன் – Potri thuthipom Em Deva devanai Lyrics

Faith Score0
Faith Score0

போற்றித் துதிப்பேன் – Potri thuthipom Em Deva devanai Tamil Christian keerthanai Song lyrics

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே – நேற்றும்
இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்

இயேசுவென்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசரேசுவை நான் என்றும்
போற்றி மகிழ்ந்திடுவேன்

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – காக்கும்
கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால் – ஆவி
ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன்

potri thuthipom em deva Lyrics in English

pottith thuthippom em thaeva thaevanai
puthiya ithayamudanae – naettum
intum entum maaraa Yesuvai
naam entum paatiththuthippom

Yesuvennum naamamae
en aaththumaavin geethamae
en naesaraesuvai naan entum
potti makilnthiduvaen

kora payangaramaana puyalil
kotiya alaiyin maththiyil – kaakkum
karamkonndu maarpil serththannaiththa
anpai entum paaduvaen

yorthaan nathiponta sothanaiyilum
sornthamilnthu maalaathae
aarppin jeya thoniyotae
paathukaaththa anpai entum paaduvaen

thaay than paalakanaiyae marappinum
naan maravaen entu sonnathaal
thaalththi ennaiyavar kaiyil thanthu
jeeva paathai entum oduvaen

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘போற்றித் துதிப்பேன் – Potri thuthipom Em Deva devanai’.
  • The song expresses devotion to Jesus, highlighting eternal praise and love for Him.
  • It includes themes of faith, protection in times of trouble, and the significance of spiritual connection.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo