வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய தாயே அம்மா கோடி கோடி மக்களுக்கு குறை தீர்க்கும் தாய் நீயம்மா தாலாட்டு பாட எனக்கு தாயாக நீ இருப்பாய் சிந்தைக்கு ஒரு வழியும் சொல்லி தவிப்போடு காத்திருப்பாய் சொந்தம் என்று வாழும் அம்மா சோகங்கள் தீர்க்கும் அம்மா அனாதி சிநேகம் தந்த அன்னை மாதிரி நீயம்மா உன் முக தரிசனம் தினந்தோறும் தாருமம்மா
வெண்ணிலா முகமுடனே ஒளி சிந்தும் அருள் மகளே மன்னவன் ஏசுசிவினை உலகிற்காய் தந்தவளே பெண்களுள் பேறு பெற்றாய் சிறுமை குணம் கொண்டவளே கருணை மனம் உடையாள் உலகம் உன்னை போற்றிடுமே என்றும் உந்தன் அன்பின் முகம் பார்ப்பதற்கு கோடி சுகம் அல்லல்படும் மக்களையும் பாசம் கொண்டு வீசி வரும் அன்னை மாதாவே அன்னை மாதாவே உந்தன் புகழ் எங்கும் போற்றும் உலகம் உள்ள காலம் தோறும்
விண்ணிலே முழுமதியாய் திருவருளாய் நிற்பவளே மண்ணிலே மானிடர்க்கு அடைக்கலமும் தருபவளே வேண்டி தினம் வருபவர்க்கு வழிகாட்டும் நிறைகுடமே தாங்கி அருள் பொழிந்திடுவாய் தமிழ்நாட்டின் தலைமகளே பிள்ளை வரம் தந்திடுவாய் நோய்களும் தீர்த்திடுவாய் அன்புவலை விரித்திடுவாய் வங்ககடல் தாரகையே அன்னை மாதாவே அன்னை மாதாவே கண்ணீர் கடலில் விழுந்து நின்றால் கரை சேர்க்கும் தாயும் நீயே
Velainager Veetirukum Aarokkiya Lyrics in English
வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய பாடல் வரிகள், Velainager Veetirukum Aarokkiya Song Lyrics
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya’.
- It describes the song’s themes of motherhood, compassion, and divine love.
- The lyrics emphasize the role of a mother-like figure, referred to as ‘அன்னை மாதா’, who alleviates suffering.
- The article includes links to related Tamil Christian song lyrics for further exploration.
- Overall, it celebrates the nurturing and protective essence of the divine mother in Tamil culture.
Estimated reading time: 2 minutes
