Vazhikattum En Deivamae Lyrics – வழிகாட்டும் என் தெய்வமே

Faith Score0
Faith Score0

Vazhikattum En Deivamae Tamil Catholic Christian Song Lyrics and sung by S. P. Balasubrahmanyam – வழிகாட்டும் என் தெய்வமே

வழிகாட்டும் என் தெய்வமே
துணையாக எனில் வாருமே ( 2 )
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதியேதும் தெரியாமலே நான்
தடுமாறும் நிலை பாருமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின்
நலனாகி எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே – வழிகாட்டும்

1.எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்

நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே

எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
எனைக்காக்கும் என் தெய்வமே
என் உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது
துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது
பலனாக கைமீது வா
இங்கு புலனாகும் இறையாக வா – வழிகாட்டும்

2.என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே

உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ

என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
இருள் நீக்கும் விளக்காகவே
நான் சுடர்வீச எனை ஏற்றவா

ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே
விண்வாழ்வின் உயர்வெல்லாம்
இவ்வாழ்வில் பலன்தானே நிறைவாழ்வின்
விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காணவா – வழிகாட்டும்

Vazhikattum En Deivamae Song Lyrics, வழிகாட்டும் என் தெய்வமே பாடல் வரிகள்

Vazhikattum En Deivamae Lyrics in English

Vazhikattum En Deivamae
Thunaiyaga Enil Vaarumae -2
Nathi Meethu Alainthadum Agal polavae
Kathiyethum Theriyamalae Naan
Thadumaarum Nilai paarumae

Anbaagi Arulagai Ennodu Ontragi
Thuyarodu Poradum En Vaalvin
Nalanagi Ennai Thaangum En Deivamae
En Nizhalaga Elum Deivamae – Valikattum En Deivamae

1.Ennaalum Unaithedum Varam Ketkirean
Un Paatha Nizhal Naadum Manam Ketkirean

Neerintriyae Mannil Valamillaiyae
Nilamintriyae Uyir Vaalvillaiyae

Ennaalum unaithedum Varam Ketkirean
Unpaatha Nizhal Naadum Manam Ketkirean
Ennaikakkum En Deivamae
En Uyiraga Elum Devamae

Nilavengum Olirnthalaum Vizhimoodi Payanethu
Thuyar Moodum Manamunthan Arul kaanum Vagaiyethu
Palanaga Kaimeethu Vaa
Ingu Pulanagum Iraiyaga Va – Vazhikatum

2.En Paathai Mudivagum Un Thazhilae
En Vaalvu Vidivagum Annalilae

Un Vaarthaigal En Vaalvagumo
Un paarvaigal En Vazhiyagumo

En Paathai Mudivagum Un Thazhilae
En Vaalvu Vidivagum Annalilae
Irul neekkum Villakagavae
Naan Sudarveesa Enai Yettrava

Aalpola Valarnthalaum Aarambam Mulaithanae
Vinvaalvin Uyarvellaam
Ivvalvil Palanthanae Niraivaalvin
Vithaiyagavae Engal Nilavaalvu payan kaanava – Vazhi kattum

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • ‘Vazhikattum En Deivamae’ is a Tamil Christian song sung by S. P. Balasubrahmanyam.
  • The lyrics express a deep connection with the divine, seeking guidance and comfort in life’s struggles.
  • The song emphasizes themes of faith, protection, and the significance of God’s presence.
  • The English translation of the lyrics is also provided for broader understanding.
  • Published by World Tamil Christians, the song serves as both a devotional piece and a cultural expression.

Estimated reading time: 3 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo