En Aathumavae Kalangidathae Lyrics – என் ஆத்துமாவே கலங்கிடாதே

Faith Score0
Faith Score0

En Aathumavae Kalangidathae Tamil Christian Song Lyrics, Written and Sung by Mrs. Sudarolithai – என் ஆத்துமாவே கலங்கிடாதே

என் ஆத்துமாவே கலங்கிடாதே
உன்னத தேவன் உன் அடைக்கலமே
வானமும் பூமியும் தானம் விட்டு
நிலை மாறினாலும் (2)

1. பஞ்சம் பசியோ நிர்வாணமோ
மிஞ்சும் வறுமையோ வந்திடினும்
கொஞ்சமும் அஞ்சாதே – தஞ்சம்
தந்து உன்னைத் தாங்கிடுவார்

2. உற்றார் உறவினர் மற்றும் பலர்
குற்றமே கூறித் திரிந்திடினும்
கொற்றவன் இயேசுன்னை பெற்ற
பிதாவைப் போல் அரவணைப்பார்

3. நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்
அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்
வஞ்சகன் எய்திடும் – நஞ்சாம்
கணைகளைத் தகர்த்திடுவார்

4. வாழ்க்கைப் படகினில் அலைகள் மோதி
ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்
சூழ்ந்திடும் புயலை நீக்கி
வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார்

5. துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்
அன்பர் சென்ற பாதை அதுவே தான்
துன்பமே உன் பங்கு – துன்பம்
மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய்

En Aathumavae Kalangidathae Song Lyrics, என் ஆத்துமாவே கலங்கிடாதே பாடல் வரிகள்

En Aathumavae Kalangidathae Lyrics in English

En Aathumavae Kalangidathae
Unnath Devan Un Adaikkalamae
Vaanamum Boomiyum Thaanam Vittu
Nilai Maarinalaum -2

1.Panjam Pasiyo Nirvanamo
Minjum Varumaiyo Vanthidinum
Konjamum Anjathae Thanjam
Thanthu Unnai Thaangiduvaar

2.Uttraar Uravinar Mattrum Palar
Kuttramae Koori Thirinthidinum
Kottravan Yesennai Pettra
Pithavai Pol Aravanaippaar

3.Nenjil Visarangal Perugaiyil
Anjathae Entravar Vasanam Thettrum
Vanjagan Eithidum Nanjaam
Kanaikalai Thagarthiduvaar

4.Vaalkkai padaginil Alaigal Mothi
Aalthukkaiyil Un Arugil Nirpaar
Soozhnthidum Puyalao Neekki
Vaalnthidavae Valakkaram Pidippaar

5.Thunba Paathai Sella Thuninthiduvaai
Anbar Sentra Paathai Athuvae Thaan
Thunbamae Un Pangu Thunbam
Moolam Deva Rajayam Servaai

Mrs. சுடரொளித்தாய்
R-Disco T-125 A 2/4

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘En Aathumavae Kalangidathae’ written and sung by Mrs. Sudarolithai.
  • The song offers spiritual comfort, emphasizing trust in God’s support during hardships.
  • It includes five verses that highlight themes of faith, resilience, and God’s presence.
  • The article provides English translations of the Tamil lyrics for better understanding.
  • Additionally, it lists related worship songs and links for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo