Engirundho oru Anbin Kural song lyrics – எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல்
எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்று என் செவியினில் கேட்கின்றது – (2)
குரல் கேட்ட பின்னாலே துன்பப் புயல் எல்லாமே பறந்து ஓடியது
என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குது அது அன்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவின் அன்பது – (2) எங்கிருந்தோ – 3
வருத்திடும் பாரம் தவித்திடும் நேரம் மகனே வா என்றது – (2) தாய் பசு கன்றினை சோ்த்து அன்போடு முகர்வது போல தாவி அணைக்கின்றது – அந்த (2) – என்னை
சோர்ந்திடும் நேரம் கண்ணீரும் வெள்ளம் மகனே வா என்றது (2) கோழி தன் சிறகினை விரித்து தன் குஞ்சுகள் சேர்ப்பது போல (காப்பதுபோல) தாவி அணைக்கின்றது – அந்த (2) – என்னை
Engirundho oru Anbin Kural Sons of Thunder Ministries Kattupuravin Sattham Ministries Ariyalur
This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.
If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.