Uyirthelunthaar Yesu Tamil Christian Easter Song lyrics – உயிர்த்தெழுந்தார் இயேசு
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிறார்
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் இயேசு ஜீவிக்கிறார்.
1. பாவத்தின் சாபத்தையும்
சிலுவையிலே சுமந்து தீர்த்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்துவிட்டார்
மரணத்தின் கூரையும் முறித்துவிட்டார்
சாபத்தின் வேரையும் நீக்கிவிட்டார் (உயிர்த்தெழுந்தார்…)
2. நியாயப்பிரமணத்தினால்
அடிமைப்பட்ட யாவரையும்
தன் ஜீவனால் விடுவித்திட
தன்னையே பலியாக தந்திட்டாரே
கிருபாசனத்தண்டை சேர்த்திடவே (உயிர்த்தெழுந்தார்…)
3. அடிமையின் ரூபமாக
சிலுவைவரை தாழ்த்திவிட்டார்
மரணத்தையும் ஏற்றுக்கொண்டார்
தேவனோ அவரை உயர்த்தினாரே
உயிரோடெழும்பி மகிமை பெற்றார் (உயிர்த்தெழுந்தார்…)
4. பரத்துக்கு ஏறி சென்றார்
முடிவுவரை என்னோடிருப்பார்
சீக்கிரமாய் வந்திடுவார்
முற்றும் முடிய இரட்சித்திடவே
இயேசுவை போலவே மாற்றிடவே (உயிர்த்தெழுந்தார்…)
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிறார்
உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என் உள்ளத்தில் இயேசு ஜீவிக்கிறார்.
Uyirthelunthaar Yesu Lyrics in English
Uyirthelunthaar Yesu Song lyrics, உயிர்த்தெழுந்தார் இயேசு பாடல் வரிகள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Irulana Vazhkai Lyrics – இருளான வாழ்க்கை
- Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்
- Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார்
- Nee Krupa Viduvadhu Lyrics
- Aaviyaai vanthar En Aandavarae Lyrics – ஆவியாய் வந்த என் ஆண்டவரே
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
And when I saw him, I fell at his feet as dead. And he laid his right hand upon me, saying unto me, Fear not; I am the first and the last:
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
I am he that liveth, and was dead; and, behold, I am alive for evermore, Amen; and have the keys of hell and of death.
வெளிப்படுத்தின விசேஷம் : Revelation :1:17-18
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian Easter song ‘Uyirthelunthaar Yesu.’
- The song celebrates Jesus’s resurrection and victory over death, emphasizing His eternal life.
- It includes verses detailing themes of salvation and deliverance from sin.
- Additionally, links to other Tamil Christian songs and resources are provided for readers.
- The lyrics assert that Jesus lives within the believer’s heart, highlighting His significance.
Estimated reading time: 2 minutes

