Vaasalandai Nindru Aasaiyai song lyrics – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் – Tamil Christian Kerthanaigal
வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோ
பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே- வாசலண்டை
1. ஆதரிப்பார் யாருமில்லை யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் – வாசலண்டை
2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி
தற்பரன் தயவை தள்ளிடலாமோ
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய் – வாசலண்டை
3. பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து
மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்
பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்
ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ – வாசலண்டை
4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில்
மகிபரின் ராஜ்ஜியம் காணக் கூடுமோ
பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும்
மெய்யாய் பிரவேசிப்பாய் தேவ ராஜ்யத்தில் – வாசலண்டை
5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு
வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு
இயேசுவல்லால் வேறு இரட்சிப்பில்லையே
இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ – வாசலண்டை
Vaasalandai Nindru Aasaiyai song lyrics in english
Vaasalandai Nindru Aasaiyai Thattum
Nesar Yesuvukku UllamThiravayo
Paaviyai Oru pothum Thallatha nesar
Vaaventru Unnai Alaikkirarae – Vasalandai Nintru
1.Aatharippaar Yaarumillai Entrenni
Aatharai Meethinil Alainthiduvayo
Kaanatha Aattai Theadi vanthar meippar
Kandunnai Manthaiyil Searthiduvaar – Vasalandai
2.Arpa Vaalvai niththiya vaalvu entrenni
Tharparan thayavai thallidalamo
Ninaiyatha neram maranam santhithaal
Niththiyaththai engu nee kazhippaai – Vasalandai
3.Paavaththinaal saaba rohaththil thointhu
Maayaiyil Aalnthu madinthuduvanean
Paavaththai pokkidum thooya uthiraththin
Jeeva oottril Moolgi Meetpuraayo – Vasalandai
4.Manam Maari Marupadi Piranthidayagil
Magibarin Rajjiyam Kaana koodumo
Piranthalo Jalaththaalum Aaviyaalum
Meiyaai Piraveasippaai deva rajjiyaththil – Vasalandai
5.Vazhiyum saththiyum jeevanaum yesu
Vaasalaum meippanum Naathanum Yesu
Yesuvallaal Veru Ratchippolaiyae
Ratchanya Naal Intrae Vanthidayo – Vasalandai
TPM
R-Waltz T-155 C 3/4
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Vaasalandai Nindru Aasaiyai’ – வாசலண்டை நின்று ஆசையாய்.
- The song expresses themes of faith, love, and redemption through various verses.
- Each verse discusses different aspects of spiritual life, such as seeking divine help and the concept of eternal life.
- The article also includes links to related Tamil Christian songs and resources.


