வரம் கேட்டு வருகின்றேன் – Varam keattu varukintrean
பாடல் வரிகள் – வருகை பாடல்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா
என் குரல் கேட்டு அருள்வாயோ தலைவா – 2
1. பகைசூழும் இதயத்தின் சுவரையெல்லாம்
என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2
உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம்
இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் – 2
என் பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்
Varam keattu varukintrean song lyrics in english
Varam keattu varukintrean iraiva
en kural keattu arulvaayo thalaiva -2
1.Pagai soozhum idhayaththin suvaraiyellaam
en paasathaal tharkintra varam keatkintrean-2
pugal soolnthu irul vaalum manathil ellaam -2
un peayar solli oliyeattra unai keatkintrean
2.nalamellam enakkentru theadum gunam
ini naalthorum irakkintra varam keatkintrean-2
paliyaga pirarkennai aliththittapin-2
en parisaga unai keatkkum varam keatkintrean


