வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum
Shop Now: Bible, songs & etc
வாழ்விலும் தாழ்விலும்
இன்ப துன்ப நேரங்களிலும் -2
எங்களுடன் இருந்து
கண்மணிப்போல் காத்து
கிருபையால் நிறைத்தவரே
நன்றி பலி உமக்குத்தானே
நன்மைகளின் நாயகரே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்றி பலி ஏறெடுப்போம்
நன்றி பலி உமக்குத்தானே
இரட்சகரே நம் இயேசுவே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்றி பலி ஏறெடுப்போம்
சோர்விலும் நோயிலும்
பெலனற்ற நேரங்களிலும் -2
தோளில் எம்மை சுமந்து
உறங்காமல் காத்து
புது பெலன் அளித்தவரே – (நன்றி பலி…)
தேவைகள் யாவிலும்
வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும்
ஆலோசனை அளித்து
வார்த்தையாலே நிறைத்து
தாங்கி ஏந்தி தப்புவித்தீரே. – (நன்றி பலி…)