ஆண்டவர் சந்நிதி கூடிடுவோம் – Andavar sanidhi koodiduvom Lyrics
ஆண்டவர் சந்நிதி கூடிடுவோம்
இன்று ஆனந்தம் மனதினிலே
அர்ப்பணப் பூக்களின் நறுமணமே
இனி ஆண்டவன் வழிதனிலே
1. நித்தமும் பலியாகும் நித்தியன் இயேசுவின்
உத்தம மாந்தர்களாய் நாம் இறைபணி ஏற்றிடுவோம்
இந்த பலியினில் கலந்து பரிசுத்தம் அடைந்திட
இறைகுலமே வாரீர் நீவிர் ஒரு குலமாய் வாரீர்
2. சத்திய வேதமும் சமத்துவ கீதமும்
இத்தரை மீதொலிக்க நமை இறைவன் அழைக்கின்றார்
அன்புப் பணியினை நாமும் பகிர்ந்திட பலன்பெற
இறைகுலமே வாரீர் நீவிர் ஒரு குலமாய் வாரீர்
Tamil Mass RC christian song with lyrics ஆண்டவர் சந்நிதி கூடிடுவோம் Andavar sanidhi வருகைப் பாடல்

