திருவிருந் தருந்திட வாரும் – Thiru Viruntharunthida Vaarum Tamil Christian Holy communion song lyrics
பல்லவி
திருவிருந் தருந்திட வாரும், ஏசு
திருச் சடலமது சேரும்.
அனுபல்லவி
‘இருசுகம் தருவார், வாரும், மிக
இலவசமாயீவார், இது சோதனை பாரும்.
சரணங்கள்
1.இருதயம் நொறுங்குண்ட பேர்க்கும், ஐயோ!
என்போலுண்டோ பாவி? யென்போர்க்கும்
மருகித் திகைத்து மாய்வோர்க்கும்-மா
தேவன் நின்றழைப்பதைச் சன்மானிப்போர்க்கும்
2.வாதையாம் பாவக்கந்தை எடுத்து-ஏசு
மகிப னுதிரத்திற் றோய்த்துடுத்து,
நீதியி னாடைகள் தரித்து-நமின்
நேசனின் திருச் சன்னிதானத்தை யடுத்து,
3.இருதயத் தூபகலத்தில்-திட
விசுவாச மெனும் வர்க்கமிட்டு,
தியானமெனும் நெருப்பு மூட்டி,தேவ
ஆசனத்தை யசைக்கத் தகுதியாய் நீட்டி,
4.விலைகொள்ளாத் திருரத்த ரசமாம்-விருந்தில்
மேலவன் மாம்ச போஜனமாம்;
நிலையதாய்ப் பசி யிலையென்பதாம்-வான
நேச மகாராஜனின் நித்யமான அன்பதாம்.
திருவிருந் தருந்திட வாரும் lyrics, Thiru Viruntharunthida Vaarum lyrics, Holy communion songs in tamil
Thiru Viruntharunthida Vaarum song lyrics in english
Thiru Viruntharunthida Vaarum Yesu
Thiru Sadalamathu Searum
Irusugam Tharuvaar Vaarum Miga
Ilavasamaeevaar Ithu Sothanai Paarum
1.Irudhayam Norungunda Pearkkum Aiyo
Enpealundo Paavi Enpearkkum
Marugi Thigaithu maaivoarkkum Maa
Devan Nintralaipathai Sanmaanipoarkkum
2.Vaathaiyaam Paavakanthai Eduthu Yesu
Magibanu thirathirraaithuduthu
Neethiyinaadaigal Tharithu Namain
Neasanin Thiru Sannithanathaiyaduthu
3.Irudhaya Thoobalakaththil Thida
Visuvasa menum Varkkamittu
Thiyanamenum Neruppu Mootti Deva
Aasanaththai Asaikka Thaguthiyaai Neetti
4.Vilaikollatha Thiruraththa Rasamaam Virunthil
Mealavan Maamsa Pojanamaam
Nilaiyathaai Pasiyilai Enabathaam Vaana
Neasa Maharajanin Nithyamaana Anbathaam.
Key Takeaways
- The article discusses the Tamil Christian holy communion song ‘திருவிருந் தருந்திட வாரும் – Thiru Viruntharunthida Vaarum’.
- It includes lyrics in both Tamil and English, highlighting the song’s significance in worship.
- The song emphasizes themes of grace, faith, and divine provision during communion.
- Links to additional Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

