அதிகாலை பனிவாடைக் காற்றே – Athikalai Panivadai Katre Lyrics

Faith Score0
Faith Score0

அதிகாலை பனிவாடைக் காற்றே – Athikalai Panivadai Katre Tamil Christmas Song Lyrics

அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
எங்கள் மனுதேவன் மரி மைந்தன் பிறந்தாரம்மா
அந்த மனுவேலன் மகராஜன் மலர்ந்தாரம்மா

பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா

அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு

ஆயர் குலம் இன்று மகிழ்கின்றது
ஆனந்த மழை நீரில் நனைகின்றது
ஆருயிர் எழில் கண்டு நெகிழ்கின்றது
ஆதவன் முகம் கண்டு மலர்கின்றது

மணிமாளிகை இடம் தரவில்லையோ
தொழுவத்திலே எங்கள் தவ முல்லையோ
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா

அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு

பூமுகம் புது வாசம் கமழ்கின்றது
பார்க்கின்ற விழி வாசல் தொழுகின்றது
தாமரை தரைமீது தவழ்கின்றது
ஆதியின் அருஞ்ஜோதி எழுகின்றது

விடிகாலையோ அவன் விழியோரமே
விதி யாவுமே அவன் விளையாடலே
பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா

அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு
எங்கள் மனுதேவன் மரி மைந்தன் பிறந்தாரம்மா
அந்த மனுவேலன் மகராஜன் மலர்ந்தாரம்மா

பதம் தேடியே மெல்லத் தீண்ட
தென்றல் காற்றே வா

அதிகாலை பனிவாடைக் காற்றே
கொஞ்சம் மெதுவாக பணிவாக வீசு

Athikalai Panivadai Katre Lyrics in English

அதிகாலை பனிவாடைக் காற்றே பாடல் வரிகள், Athikalai Panivadai Katre Song Lyrics

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song, ‘அதிகாலை பனிவாடைக் காற்றே – Athikalai Panivadai Katre’.
  • The song describes joyful scenes of celebration and the beauty of the morning breeze during Christmas.
  • It highlights themes of happiness, divine birth, and the natural beauty surrounding the festivities.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo