Ooivu Naalathai Sthabi Lyrics – ஓய்வு நாளதை ஸ்தாபி

Faith Score+1
Faith Score+1

Ooivu Naalathai Sthabi Lyrics – ஓய்வு நாளதை ஸ்தாபி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே
உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்

அனுபல்லவி

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு
வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு

சரணங்கள்

தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத்
திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க
ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க
எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு

விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட
வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட
மண் உலகில் போரட்டச் சாலையில் ஓட
வரம் அளித்திட உம்மைக் கெஞ்சி மன்றாட – ஓய்வு

முத்தி வழி விலக்கும் துர்க் குணம் மாற்றி
முன் நின் றெம்மை நடத்தியே கரை ஏற்றி
எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றி
இறைஞ்ச அருளும் உமதாவியை ஊற்றி – ஓய்வு

Ooivu Naalathai Sthabi Lyrics in English

Ooivu Naalathai Sthabi Tharuliyae
Unnathaa Umakkae Sthosthiram

Maaivila Maraiyai Yaam Manathil Utkondu
Vaalththi Ummai Pugalnthu Pottra Vaai Vindu

1.Dega Kavalai Thozhil Yaavaiyum Olikka
Dhivya Sinthaiyaal Engal idhayamae Selikka
Yeagan Nin Arul Pettringikal Ara Thalaikka
Evarum Thirunaalao Kondaadi Ekkalikka

2.Vinnorudan Yaavarum Aayil Kooda
Vedha Ummai Pugalnthu Mangalam Paada
Man Ulagil Poraatta Saalaiyil Ooda
Varam Aliththida Ummai Kenji Mantraada

3.Muththi Vazhi Vilakkum Thur Gunam Maattri
Mun Nintremmai Nadaththiyae Karai Yeattri
Eththeasaththaarum Ummai Yeagmaai Pottri
Irainja Aarulum Umathaaviyai Oottri

2 Comments

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo