பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum

Faith Score+2
Faith Score+2

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum Tamil christian Pongal song lyrics, Ulavar Thinam

பொங்கலோ பொங்கல் எங்கும் முழங்கிட
புதிய வாழ்வு புலர்ந்தது
மங்கலம் தங்கிட இறைமகன் வரும்
பந்தியிலே இன்பம் நிறைந்தது
இயேசு வருகின்றார்
கறைகள் குறைகள் கவலைப் போக்க
இயேசு வருகின்றார்
வளமை இனிமை வாழ்வில் சேர்க்க
உணவில் வருகின்றார் (2)

உழைப்பதன் மாண்பினைப் போற்றியே – ஓர்
உடலெடுத்து மனிதனாக வருகின்றார்
களைப்பினைச் சோர்வினைப் போக்கிட – தன்
உடலையே உணவென தருகின்றார் (2)
உழைப்பிலும் உண்ணும் உணவிலும்
இறைவன் தெரிகின்றார் (2) – திரு
விருந்தில் கலந்து பொங்கலைப் பகிர்ந்து
அன்பைக் கொண்டாடுவோம்

கோதுமை அப்பமே திருவுடல் – கனி
திராட்சையே இயேசுவின் உதிரமாய்
நிலத்தினில் வளைந்த நல் கனிகளே – இறை
அருளினை வழங்கிடும் கொடைகளாய் (2)
உணவென வரும் இறைவனை
உள்ளம் வரவேற்போம் (2) – இந்த
மண்ணும் உயிர்களும் கண்ணின் மணியென
என்றும் கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல் எங்கும் பாடல் வரிகள், Pongalo Pongal engum lyrics

Pongalo Pongal engum song lyrics in english

Pongalo Pongal engum
Puthiya Vaalvu Pularnthu
Mangalam Thangida Iraimagan Varum
Panthiyilae Inbam nirainthathu
Yesu Varukintraar
Karaigal kuraigal kavalai pokka
Yesu varukintraar
Valamai Inimai Vaalvil Searkka
Unavil Varukintraar -2

Ulaippathan maanbinai pottriyae – Oor
Udaleduthu manithanaga varukintraar
kalaipinai soarvinai pokkida -than
udalaiyae unavena tharukintaar-2
Ulaippilum Unnum Unavilum
Iraivan therikintraar-2 Thiru
Virunthil kalanthu pongalai pagirnthu
Anbai Kondaduvom

Kothumai Appamae Thiruvudal -kani
Thiratchai yesuvin uthiramaai
Nilathinil Valaintha nal kanigalae irai
Arulinai Valangidum Kadaikalaai-2
Unavena varum iraivanai
Ullam varavearpoam-2 Intha
Mannum uyirkalum Kannin maniyena
entrum kondaduvom

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum’.
  • It celebrates themes of new life and divine presence, emphasizing joy and abundance.
  • The lyrics highlight Jesus’s role and encourage communal sharing during festivities.
  • Translations of the song lyrics into English are also provided for broader understanding.
  • Links to related Tamil Christian songs are available for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo