பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram Poonthentral Tamil Christian song lyrics
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு என்னில் உறவாடும் நேரம்
என் துன்ப ராகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்
1.நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )
காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆஆஆ ம்ம்ம்
( பொன்மாலை )
2.ஒரு கணம் என் அருகினில் – நீ அமரும் போது ஒரு யுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புது யுகம் – ( 2 )
முள்ளில் பூத்த ரோஜா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லையில்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன்னன்பைப் பாடவே
ஆஆஆ ம்ம்ம்
பொன்மாலைநேரம் பூந்தென்றல் lyrics, Ponmaalai Neram Poonthentral lyrics, Tamil songs
Ponmaalai Neram Poonthentral song lyrics in English
Ponmaalai Neram Poonthentral Kaattril
En Jeeva Ragam Karainthoduthae
En Yesu Ennil Uravaadum Neram
En Thunba Raaga Kalainthoduthae
Un Vaalvu Ontrae En Thedalagum
Un Anbu Ontrae En Paadalagum
1.Neeyillatha Naalellaam Nilavillatha Vaanam Naan Un
Ninaivillatha Vaalvellam Malaiyillatha Megam Naan-2
Kaalam Thorum Kannin Manipol Kakkum Deivamae
Sumai Sumanthu Sorntha Vaalvai Theattrum Iraivanae
En yesuvae Abayam Nee Thara Vednumae
En Deivamae Arugil Nee Varavendumae
Kaattril Aadum Deepam Ennai Siragil Moodumae – Pon Maalai
2.Oru Kanam En Aruginil Nee Amarum Pothu Oru Yugam
Unai thinam Naan Pugalkaiyil Enakkul Thontrum puthu Yugam-2
Mullil Pootha Roja Ennai Alli Parippathean
Solla Mudiya Anbil Ennai Soodi Magilvathean
En Yesuvae En Anbukku Vaanam Elllai
En Deivamae Un Anbukku Ellaiyillai
Anbin Iraiyae Enthan Idhayam Un Anbai paadavae – Pon Maalai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘பொன்மாலைநேரம் பூந்தென்றல் – Ponmaalai Neram Poonthentral’.
- It expresses themes of love, devotion, and the divine connection with Jesus.
- The lyrics include vivid imagery and emotional expressions about life and faith.
- The article provides both Tamil and English versions of the lyrics for accessibility.
- Additionally, it links to related Tamil Christian songs for further exploration.

