இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

1.இரட்சகரே போகாதிரும்
என் சத்தம் கேளும்
மற்றோரும் அழைக்கும்போது
போய்விடாதிரும்

மீட்பா மீட்பா
என் சத்தம் கேளும்
மற்றோரும் அழைக்கும்போது
போய்விடாதிரும்

2.உம் கருணையாலே நானும்
சுகம் காணட்டும்
முழங்காலில் நின்று கேட்க
வந்துதவிடும்

3.உந்தன் நன்மையை நான் நம்பி
முகம் தேடுகிறேன்
காயப்பட்டுடைந்தாவியை
குணமாக்கிடும்

4.நீர்தான் ஆறுதலின் ஊற்று
ஜீவனின் மேலாம்
யாருண்டெனக்கு இப்பூவில்
பரத்தில் நீரே

Leave a Comment