உணவாக உறவாக உயிராக – Unavaga uravaga Uyiraga
உணவாக உறவாக உயிராக வருபவரே!
உள்ளம் வந்து நலம் தந்து
இன்னுயிரைத் தருபவரே – 2
சிறப்பிலும் வியப்பிலும் விருந்தாக நீ!
உழைப்பிலும் களைப்பிலும் மருந்தாக நீ! – 2
என்னில் வா!
என்னுள் வாழ்!!
நீயாக நான் மாறவே !!!
1. நெஞ்சில் நிதம் இதமாகி உணவாகி கலந்திடக் கண்டேன்
நெகிழும் என்மனம் தினமுன் உறவுதனில் உயர்ந்திட கண்டேன் -2
கரங்கள் விரியுதே
வரங்கள் பெருகுதே -2
உயிரே! உறவே!உணர்வே! நிறைவே!
2. அன்போடு அமுதூட்டும் கரிசனைத் தாயாய் கண்டேன்
தோளோடுத் தாலாட்டும் பரிசினைத் தந்தாய் கண்டேன் – 2
பாசம் பெருகுதே
நேசம் நிலைக்குதே – 2
உயிரே! உறவே!உணர்வே! நிறைவே!
Unavaga uravaga Uyiraga song lyrics in english
Unavaga uravaga Uyiraga Varubavarae
Ullam Vanthu Nalam Thanthu
Innuyirai Tharubavarae-2
Sirappilum Viyappilum Virunthaga Nee
Ulaippilum Kalaippilum Marunthaga Nee-2
Ennil Vaa
Ennul Vaa
Neeyaga Naan Maaravae
1.Nenjil Nitham Ithamagi Unavaagi Kalanthida Kandean
Negilum En Manam Thinamun Uravuthanil Uyarnthida Kandean -2
Karangal viriyuthae
Varanagal Peruguthae-2
Uyirae uravae Unarvae Niraivae
2.Anbodu Amuthoottum Karisanai thaayaai kandean
Thozhodu thaalattum Parisinai Thanthaai Kandean-2
Paasam Peruguthae
Nesam nilaikkuthae -2
Uyirae Uravae Unarvae Niraivae
