உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா – Uyirthelunthare Alleluia Easter Song
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் – 2
இயேசென் சொந்தமானாரே – 2
உயிர்த்தெழுந்தாரே
1 ) கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர்
இயேசென் சொந்தமானாரே
உயிர்த்தெழுந்தாரே
2) மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர்
இயேசென் சொந்தமானாரே
உயிர்த்தெழுந்தாரே
3) மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும்
பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர்
இயேசென் சொந்தமானாரே
உயிர்த்தெழுந்தாரே
4)ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர்
இயேசென் சொந்தமானாரே
உயிர்த்தெழுந்தாரே


