வண்ண வண்ண லீலி மலர் – Vanna vanna leeli malar Lyrics

Faith Score+2
Faith Score+2

வண்ண வண்ண லீலி மலர் – Vanna vanna leeli malar Tamil christian Maadha Paadalgal song lyrics

பாடல் வரிகள் – மாதா பாடல்

அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்
அருமருந்தாய்… விண்ணவர்க்கரசியாய்
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்
மாசிலா கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே
தவத்தின் உருப்பயனே
என் தாயான அம்மா தாயான அம்மா

வண்ண வண்ண லீலிமலர் அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கன்னல் சுவை தேனமுதே கன்னிமரியாயே
கன்னிமரியாயே – 2
தன்னை இந்த புவிக்களித்த இறைவன் திருமகன் உன்னை
தாயாக ஆசி தந்தான் தான்
பிறக்கும் முன்னே – 2 (வண்ண வண்ண)

1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உந்தன்உள்ளம்
தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம் – 2
வள்ளல் அம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா
எல்லையில்லா பேரின்பத்தின்
எழில்வாசல் திருவிளக்கே – 2 (வண்ண வண்ண)

2. தாளாத நோய்க்கொடுமைக் காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள் குறைகளை தீர்ப்பவளே – 2
வேளாங்கண்ணி அமர்ந்த வேதாநாயகன் தாயே
ஆதாரம் நீர் துணையை
ஆரோக்கிய மாமரியே – 2 (வண்ண வண்ண)

வண்ண வண்ண லீலி மலர் பாடல் வரிகள், Vanna Vanna Leeli Malar Lyrics, Matha Paadalgal tamil

Vanna Vanna Leeli Malar Song Lyrics in English

Annaiyaai Arulamuthaai Nal Aasanaai
Arumarunthaai Vinnavarkarasiyaai
Mannil Uyirkkellam maathavaai
Masilla Kanniyaai Karthanai Eentra thavamae
Thavaththin Uruppayanae
En Thaayana Amma Thaayana Amma

Vanna vanna leeli malar Annai Mari Neeyae Aarokkiyathayae
Kannal suvai theanamuthae Kannimariyayae Kannimariyaye -2
Thanni Intha Puvikkaliththa Iraivan Thirumagan Unnai
Thaayaga Aasi Thanthaan thaan
Pirakkum munnae -2

1.Alla Alla Kuraiyatha Aazhiyamma Unthan ullam
Kolluthu Tamil Kaaviyamaai Thiththikkum Karunai vellam -2
Vallal Amma Engalaiyae Vaazhavaikkum Thaai Amma
Ellaiyilla Pearinbaththin
Ezhil Vaasal Thiruvilakkae -2

2.Thaalatha Noaikodumai Kaalaaki thavithu nintrom
Kodana Kodi Makkal Kuraikalai Theerppavalae -2
Vealankanni Amarntha Vedha naayagan thayae
Aathaaram neer thunaiyae
Aarokkiya Maamariyae -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘வண்ண வண்ண லீலி மலர் – Vanna vanna leeli malar’.
  • It includes verses praising the Mother Mary and her divine qualities.
  • The lyrics convey themes of devotion, healing, and maternal love.
  • The article also provides English translations of the lyrics for better understanding.
  • Additionally, it offers links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo