ஆயிரம் இதயங்கள் இருந்தாலும் – Aayiram Idhayangal Irunthaalum Tamil Christian Song Lyrics
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும் உன் -திரு இருதயம் போல் வருமா
கதியில்லா மனிதரின் காருண்ய- நேசனே
கருணையின் இதயமும் நீதான்
பாவங்கள் போக்கிடும் பரிசுத்த இதயமே
இயேசுவின் நல் திரு இருதயமே
இயேசுவின் திரு இருதயமே -2
1.உம்மை பிரிந்தேன் மறந்து சென்றேன்
இருந்தும் உன் மனம் இரங்கியதே
இறை உம்மை போல நிலையான உறவை
நான் எங்கும் இதுவரை கண்டதில்லை
இறையே உம் இரக்கம்
இறவா உம் கருணை
தாய் போல் தாங்கிடுதே
அஞ்சாதே என்று ஆறுதல்
தந்து நாளும் காப்பவரே
உம்மை போல் ஓர் இதயம் எனக்கில்லையே -(பாவங்கள் )
2.தேவனே நீயில்லா இதயம் கொண்டு எம் வாழ்வும் நிறைவு அடைந்திடுமோ…
செல்வம் தேடும் அவசர உலகில் நிரந்தர செல்வமும் நீரன்றோ
குறையாத அன்பே விலகாத
உறவே நிறைவாக காப்பவரே
அருள் தந்து எம்மை அகலாது என்றும் நேசமாய்
அணைப்பவரே உம்மை போல் ஓர் இதயம் எனக்கில்லையே
பாவங்கள் போக்கிடும்
பரிசுத்த இதயமே
இயேசுவின் நல் திரு இருதயமே
இயேசுவின் திரு இருதயமே -2
Aayiram Idhayangal Irunthaalum Lyrics in English
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும் பாடல் வரிகள், Aayiram Idhayangal Irunthaalum Song Lyrics
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆயிரம் இதயங்கள் இருந்தாலும் – Aayiram Idhayangal Irunthaalum’.
- The song emphasizes themes of divine love, compassion, and the unique heart of Jesus.
- It reflects on the need for a constant, loving relationship with God amid a busy, material world.
- The lyrics convey the significance of God’s heart and mercy, likening it to a mother’s care.
Estimated reading time: 2 minutes
