Abishekam Polikinrathe Lyrics – அபிஷேகம் பொழிகின்றதே

Faith Score+1
Faith Score+1

Abishekam Polikinrathe Tamil Christian Anoiting songs Lyrics, Written and Sung by John Shadrach – அபிஷேகம் பொழிகின்றதே

அபிஷேகம் பொழிகின்றதே
எல்லா நுகங்கங்களும் உடைகின்றதே
உந்தன் வல்லமையால் நிரப்பிடுமே
இன்று வரங்கள் கிரியை செய்யட்டுமே
மேக ஸ்தம்பம் மே அக்கினி ஸ்தம்பமே
என்னை நிரப்பும் ஆவியானவரே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
என்னை நிரப்பும் ஆவியானவரே
ஆளுகை செய்யும் அனலாக்குமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே

ஜெபத்திற்கு பதில் தருவீர் அக்கினியாய் இறங்கிடுவீர்
பாவத்தின் கட்டுக்களை சாம்பலாக எரித்திடுவீர்-2

பழையவை எல்லாம் ஒழிந்து போனதே
புதிய சிருஷ்டியாக மாற்றுமே

வியாதிகள் மறைந்திடுமே பிசாசுகள்
ஓடிடுமே அந்தகார வல்லமைகள்
செயலிழந்து போய்விடுமே
உந்தன் வல்லமைகள் குறையாது
இன்றும் அற்புதங்கள் செய்திடுதே – மேக ஸ்தம்பமே

குறைவுகள் நிறைவாகும் வனாந்திரம் வயலாகும்
நீர் வந்தால் சூழ்நிலைகள் தலைகீளாய்
மாறி போகும் குறைவுகள் நிறைவாகும்
வனாந்திரம் வயலாகும்
நீர் வந்தால் சூழ்நிலை நிலைங்கள்
தலைக்கீழாய் மாறி போகும்
காற்றும் மழை இன்றி போனாலும்
வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்புமே – மேக ஸ்தம்பமே

பெந்தேகோஸ்தின் நாளை போல அக்கினியின் நாவுகள்
எங்களின் தலைகள் மேலே இன்று வந்து அமரட்டுமே
அக்கினி ஜுவாலையாக மாற்றுமே
ஆனந்த தைலத்தாலே நிரப்புமே
அக்கினி ஜுவாலையாக மாற்றுமே – மேக ஸ்தம்பமே

Abishekam Polikinrathe Lyrics in English

Abishekam Polikinrathe Song Lyrics, அபிஷேகம் பொழிகின்றதே பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song Abishekam Polikinrathe, written and sung by John Shadrach.
  • The lyrics emphasize themes of divine anointing and the power of God to transform and heal.
  • It discusses the spiritual significance of the song, highlighting the role of the Holy Spirit and the joy of worship.
  • The article includes a brief introduction and notes that the lyrics are published by World Tamil Christians.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo