அந்தோ சிலுவைப் பவனி – Antho Siluvai Pavani lyrics

Deal Score+2
Deal Score+2
Join Us 

சரணங்கள்

1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது
ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம்
அழுதாலுந்தான் தீருமோ – குரு
சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி

2. தோளில் பாரம் அழுந்தவே – அவர்
தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ
தூக்கிவிடுவார் இல்லையோ – மா
தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி

3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு
தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே
துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் – ஒருவன்
தொந்தரை செய்தே அலட்டுறான் – சகி சகி

4. மெல்ல இயேசு நடக்கிறார் – வேர்த்து
மெய் சோர்ந் துடைந்து சடைக்கிறார் – தம்மைப்
பலியாய் விருப்புடன் படைக்கிறார் – எந்தன்
பாவக் கடன்களை அடைக்கிறார் – சகி சகி

5. மாதா ஏங்கித் தேம்புறாள் – நன்மை
வாங்கினோர் புலம்பி ஏங்குறார் – சீமோன்
மதிசோர்ந்து குருசைத் தாங்குறான் – ஐயோ
மருகி யோவான் முகம் வீங்குறான் – சகி சகி

6. கல்வாரி மலையில் ஏறுகிறார் – மெய்
கருகி அன்பர் சோர்கிறார் – சாலேம்
மாதர் புலம்பி அழுகிறார் – அவர்க்
காறுதல் மொழிகள் கூறுகிறார் – சகி சகி

7. சோலையில் வந்த பாவத்தால் இயேசு
சாலையின் வழியே போகிறார் – அலங்
கோலமாகி என்னால் சாகிறார் – தேவ
கோபாக்கினையில் வேகிறார் – சகி சகி

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

1 Comment
 1. thanks very use full this app and getting latest songs and lyrics

  Leave a reply

  The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

  Sign in and copy the lyrics ! Thanks
  WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
  Logo
  Register New Account
  Reset Password
  %d bloggers like this: