Athiyil Vaarthaiyaai Lyrics – ஆதியில் வார்த்தையாய்

Faith Score0
Faith Score0

Athiyil Vaarthaiyaai Tamil Christmas Song Lyrics, written and Sung by Rajendran K.Masilamani – ஆதியில் வார்த்தையாய்

தொகையறா 1 –
ஆதியில் வார்த்தையாய் தண்ணீரில் அசைந்தவர்
புவிதன்னில் தோன்றினாரே
வானமும் பூமியும் புவிவாழும் உயிர்களும்
படைத்தவர் தோன்றினாரே
தந்தையும் மகனுமாய் ஆவியின் நிழலுமாய்
தரணியில் தோன்றினாரே
அருள் ஒலி கேட்டதும் ஆகட்டும் என்ற நல்
மரிமடி தோன்றினாரே
இயேசு மனு உருவில் தோன்றினாரே
ஆராரிரோ ஆராரிரோ அன்பான தெய்வமே ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ அன்பான செல்வமே
ஆராரிரோ – ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

Prelude Music – பல்லவி-1
விண்ணில் எங்கும் மின்மினிக் கூட்டம்
மண்ணில் மலர்கள் பனித்துளி ஆட்டம்
இசையில் இதயம் இறைவன் துதி பாடும்
இறைவன் வரவால் உலகம் மகிழ்ந்தாடும்
Happy Christmas Merry Christmas – 2
Happy Happy Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Merry Christmas

Interlude Music – சரணம் 1
மரியின் மடியில் மழலை சிரிப்பு
மதிபோல் தோன்றுது குழந்தையின் வனப்பு
உறவால் வந்தது இயேசுவின் மீட்பு
உயிரில் கலந்தது அருள்தரும் காப்பு
உலகம் எங்கும் இறைகுல வெள்ளம்
உள்ளம் உருகி இறைவனை வேண்டும்
உளரும் உறவும் வாழ்த்துக்கள் சொல்லும்
உதய வாழ்வினை உலகமே காணும்
Happy Christmas Merry Christmas – 2
Happy Happy Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Merry Christmas

தொகையறா 2 –
மனுக்குலம் தழைத்திட மண்ணினால் மனிதனை
படைத்தவர் தோன்றினாரே
பிணக்குகள் பிரிவினை ஒழிந்திட நல்வழி
காட்டிட தோன்றினாரே
விண்ணிலே மின்மினி ஜொலித்திட குடிலிலே
கண்மணி தோன்றினாரே
மண்ணிலே அமைதியும் சாந்தமும் நிலவிட
மகிமையாய் தோன்றினாரே
இயேசு மனு உருவில் தோன்றினாரே
ஆராரிரோ ஆராரிரோ அன்பான தெய்வமே ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ அன்பான செல்வமே
ஆராரிரோ – ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

Prelude Music – பல்லவி-2
விண்ணில் எங்கும் மின்மினிக் கூட்டம்
மண்ணில் மலர்கள் பனித்துளி ஆட்டம்
இசையில் இதயம் இறைவன் துதி பாடும்
இறைவன் வரவால் உலகம் மகிழ்ந்தாடும்
Happy Christmas Merry Christmas – 2
Happy Happy Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Merry Christmas

Interlude Music – சரணம் 2
மலையும் வனமும் வாசனை வீசும்
மதியும் நதியில் நடனம் புரியும்
பறக்கும் வண்டினம் ரீங்காரம் செய்யும்
பாசப்பறவைகள் பாவனை பாடும்
மலையும் வனமும் வாசனை வீசும்
மதியும் நதியில் நடனம் புரியும்
பறக்கும் வண்டினம் ரீங்காரம் செய்யும்
பாசப்பறவைகள் பாவனை பாடும்
Happy Christmas Merry Christmas – 2
Happy Happy Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Merry Christmas

Athiyil Vaarthaiyaai Lyrics in English

Athiyil Vaarthaiyaai Song Lyrics, ஆதியில் வார்த்தையாய் பாடல் வரிகள்

Key Takeaways

  • The article presents the Tamil Christmas song lyrics for ‘Athiyil Vaarthaiyaai’ written and sung by Rajendran K. Masilamani.
  • It includes multiple verses and musical sections, emphasizing themes of faith and celebration.
  • The song features English translations of the lyrics in a separate section, catering to a wider audience.
  • Additionally, it provides links to other Tamil Christian songs for readers interested in similar content.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo