Eppothum Neer En Lyrics – எப்போதும் நீர் என்

Faith Score+1
Faith Score+1

Eppothum Neer En Tamil Christian Song Lyrics, Written and Sung by Paul H Rufus – எப்போதும் நீர் என்

எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?

அனலாய் சில காலம்
குளிராய் சில காலம்
எனையே நான் நொந்து
வாழ்ந்தேன் பல காலம்(2)
ஆடையில் உள்ள வெண்மை
உள்ளில் இல்லையே
வார்த்தைகள் சொல்லும் உண்மை
வாழ்வில் இல்லையே (2)
என்னைக் கண் பாரும் இயேசுவே

யாவும் வெளிவேஷம்
இல்லை விசுவாசம்
வாழ்வு ஆனது தோஷம்
இல்லை சந்தோஷம் (2)
உப்பை போல வாழும் வாழ்வில்
சாரம் இல்லையே
தீபம் போல வாழ வேண்டி
தீயில் வேகிறேன்(2)
அன்பின் கரம் நீட்டும் இயேசுவே

எப்போதும் நீர் என் அருகினிலே
இருப்பதை உணர்கிறேன்
ஆனாலும் உம்மை மறந்துவிட்டு
அலைகிறேன் இயேசுவே (2)
புதிதாய் இனிதாய் எந்தன்
வாழ்வும் நிலையாய் மாறும்
தருணம் இனிதான் வந்திடுமோ ?
எப்போதும.. நீர் என் அருகினிலே
ஆனாலும.. உம்மை மறக்கிறேன்

Eppothum Neer En Lyrics in English

Eppothum Neer En Song Lyrics, எப்போதும் நீர் என் பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Eppothum Neer En – எப்போதும் நீர் என்’.
  • The song expresses themes of faith, presence, and longing for Jesus.
  • It includes reflections on life’s challenges and the desire for a deeper connection with God.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo