எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam

Faith Score+3
Faith Score+3

எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam En Devanae Tamil Christian Song Lyrics

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே -எத்தனை

சரணங்கள்

1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! – எத்தனை

2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே ,
உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! – எத்தனை

3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல் ,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! – எத்தனை

4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! – எத்தனை

எத்தனை திரள் என் பாவம் பாடல் வரிகள், Eththanai Thiral En Paavam Lyrics, Tamil songs

Eththanai Thiral En Paavam song Lyrics in English 

Eththanai Thiral En Paavam, En Devanae!
Eliyavan Mael Erangaiyanae

Niththam En Irudhayam Theeyathen paranae
Nilaivaram Enil Illai; Nee En Thaabaramae

1.Paththam Un Meal Enakkillai Enbaeno
Paninthidal Ozhivaeno
Suththamurun karam kaalkal, Vilavinil
Thontruthu Kaayangal, Thooya Shineka

2.Entran Aneethigal En Kankal Munnamae
Idaividathirukaiyilae
Untran Migun kirubai Oh Migavum Periyatahe
Uththama manamudaiyoi Enai Aalum

3.Aayan kolvonpol paava sththripol
Arukiliruntha Kallan poal
Neayamaai Un Saran En Vanaginean
Nee Enakagavae Mariththanai Paranae

4.Ketta Maganpoal thuttanaai Alainthean
Kedu Pankathaal Nalinthean
Ittamaai Magan Ena paathiran Alan Naan
Ennai Ratchithidal Untran Nimithamae Appanae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam’.
  • The song expresses themes of divine mercy and grace, emphasizing reliance on God.
  • It includes multiple stanzas, each reflecting on personal struggles and God’s intervention.
  • The lyrics are provided in both Tamil and English, maintaining rhyme and rhythm in translation.
  • The keyphrase ‘எத்தனை திரள் என் பாவம் – Eththanai Thiral En Paavam’ encapsulates the core message of the song.
2 Comments
  1. Praise the LORD,
    Last but one line is:
    இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்

    Should be
    இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அலன் நான்

    “அலன் நான்”

    God bless your ministry.

  2. Thank you !!

    Leave a reply

    About Us

    Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

    World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
    Logo