Iraiva Oru Varam Vendumae Tamil Christian devotional song lyrics – இறைவா ஒரு வரம் வேண்டுமே.Written by Poet.VictorDoss.
இறைவா ஒரு வரம் வேண்டுமே,..
தினமும் உனைப்பாடும் அருள் வேண்டுமே..
மலர் போல மனம் வேண்டுமே …
மெழுகாய் ஒளிவீசும் குணம் வேண்டுமே…
எத்தனை அழகு, எத்தனை சிறப்பு ,இறைவா உன் படைப்பு
இப்புவி மீது, ஏன் என்னை படைத்தாய், அதுதான் என் வியப்பு
விண்ணகம் இருந்து, மண்ணகம் வந்தாய், எப்படி அந்தக் கனிவு.
அப்பனே உன்னை, அப்பமாய் தந்த, அன்பிற்கு சமமா உலகு. – இறைவா…
- காலையில் கிழக்கில் பூக்கிற கதிரில் உன் முகம் பார்க்கிறேன்
தாய்விரல் போல கோதிடும் காற்றில் உன் குரல் கேட்கிறேன்
தோட்டத்தின் பூவின் வாசத்தில் உந்தன் தோற்றதைப் பார்க்கிறேன்
வாழையைப் பார்க்கும் போதெல்லாம் உந்தன் வாழ்க்கையைப் பார்க்கிறேன்
இலை கொண்டு மரங்கள் கையைத் தட்டும்
வண்டு வந்து பூவில் மெட்டுக் கட்டும்
நன்றி சொல்லி பறவை பாடி நிற்கும்
நானும் உன்னைப் பாடுவேன்
தனியாக நதிகள் பேசிச் செல்லும்
நாணல் கூடத் தலையை ஆட்டிக்கொள்ளும்
தாள்பணிந்துத் தொழுது அன்பைச் சொல்லும்
நானும் உன்னைப் பேசுவேன் – எத்தனை…. - தண்ணீரின் மீது கைகளை வைத்தாய் ரசமாய் ஆனது
பூங்கடல் மீது பார்வையை வைத்தாய் புயலும் போனது
பாவத்தின் மரத்தை தோள்களில் வைத்தாய் சிலுவை பூத்தது
எங்களுக்காக உன்னையே வைத்தாய் மீட்பு வாய்த்தது
வெறுத்தாலும் அன்பு செய்யச் சொன்னாய்
வீழும்போதும் உண்மை சொல்லக் சொன்னாய்
தப்பு செய்த பெண்ணை அன்பு கொண்டு
மன்னித்து நீ மாற்றினாய்
நோயென்றால் மருந்தாய் ஓடி வந்தாய்
ஏழையென்றால் விருந்தாய் தேடிவந்தாய்
மந்தைபோல உன் முன் வந்து நின்றோம்
தந்தைப் போல தேற்றினாய் – எத்தனை
Iraiva Oru Varam Vendumae song lyrics, இறைவா ஒரு வரம் வேண்டுமே song lyrics.
Iraiva Oru Varam Vendumae song lyrics in English
Iraiva Oru Varam Vendumae
Thinamum Unnai Paadum Arul Vendumae
Malar Pola Manam Vendumae
Melugaai Oliveesum Gunam Vendumae
Eththanai Alagau
Eththanai Sirappu
Iraiva Un padaippu
Ippuvi Meethu
Yean Ennai padaithaai
Athuthaan En Viyappu
Vinnagam Irunthu
Mannagam Vanthaai
Eppadi Entha Kanivu
Appanae Unnai
Appamaai Thantha
Anbirkku Samamaa Ulagu – Iraiva
1.Kaalaiyil Kizhakkil Pookkira Kathiril
Un Mugam Paarkirean
Thaai Viral Pola Kothidum Kaattril
Un Kural Keatkirean
Thottathin poovin vaasathil Unthan thottrathai Paarkkirean
Vaalaiyai Paarkkum Pothellaam Unthan
Vaalkakiyai Paarkkirean
Ilai kondu marangal kaiya thattum
Vandu Vanthu Poovil Mettu kattum
Nantri solli paravai Paadi nirkkum
Naanum Unnai paaduvean
Thaniyaga Nathigal Pesi sellum
Naanal Kooda Thalaiyai Aattikollum
Thaazh panintha Tholuthu Anbai Sollum
Naanum Unnai Pesuvean – Ethanai
2.Thanneerin Meethu Kaikalai Vaithaai Rasamaai Aanathu
Poonkadal Meethu paarvaiyai vaaithaai Puyalum ponathu
Paavaththin Marathai Thozhkalil Vaithaai siluvai Poothath
Engalukkaga Unnaiyae Vaithaai Meetpu Vaaithathu
Veruthalaum Anbu seiya sonnai
Vilumpothum Unmai Solla sonnai
Thappu seitha pennai Anbu kondu
Mannithu Nee Maattrinaai
Noyentraal Marunthaai Oodi vanthaai
Yealaiyentraal Virunthaai Theadi Vanthaai
Manthaipola Un Mun Vanthu Nintrom
Thanthai pola Theattrinaai – Ethanai
“Iraiva Oru Varam” is a heartfelt Tamil Christian devotional song written by poet Victordoss. The lyrics express deep faith, gratitude, and a plea for divine blessings. The song beautifully describes God’s presence in nature, His unconditional love, and His ultimate sacrifice for humanity. With poetic imagery and soulful devotion, it inspires believers to see God’s grace in every aspect of life.


