குறையாத அன்பு கடல்போல வந்து – Kuraiyatha Anbu Kadalpola Vanthu Christian Song lyrics in Tamil and English From Nan Maravaen Album.
Kuraiyatha Anbu Kadalpola Vanthu Song lyrics in Tamil
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே
1.கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய்
கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய்
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வாழ வழி செய்கின்றாய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் மண் மீது வாழ வழி செய்கின்றாய்
2.அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே
3.இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய்
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய்
தீமை சிறைகொண்ட எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழும் வழி காட்டினாய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் சிறை மீண்டு வாழும் வழி காட்டினாய்
குறையாத அன்பு கடல்போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே
அந்த அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே
Kuraiyatha Anbu Kadalpola Vanthu song lyrics in english
Kuraiyatha Anbu Kadalpola Vanthu
Niraivaga ennil alaimothuthae
antha alai meethu yesu asainthaadi varavae
palakodi geetham uruvaguthae
1.Kan moodi iravil naan thoongumpothu
kannana yesu enai kaakkintraai
unnai ennatha ennai ennaalum enni
man meethu vaazha vazhi seikintraai – Naan
man meethu vaazha vazhi seikintraai
2.Adivaanam thontrum vidivelli entrum
thodarkindra iravil mudivagumae
mannil thudikintra yealai vadikintra kanneer
thudaikintra yesu arasagumae -2
3.Irul Vanthu soozha bayameayum kaalai
Arul thanthu ennai anaithaaluvvaai
Theemai siraikonda enthan ulamennum paravai
sirai meendu vaazhum Vazhi kaattinaai – naan
sirai meendu vaazhum Vazhi kaattinaai
குறையாத அன்பு – Kurayatha Anbu Details
“குறையாத அன்பு” என்பது நான் மறவேன் ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு ஆன்மிகத் தருணங்களை எழுப்பும் இனிய பாடலாகும். சுரேந்தர் மற்றும் அருந்ததி ஆகியோரின் மனதைக் கவரும் குரல்களில் இந்த பாடல் உயிர் பெறுகிறது. ரெவ.ஃபா. ஜான் குழந்தை அவர்களின் வரிகள், தேவனின் குறையாத, மாற்றமறியாத அன்பைச் சீராக எடுத்துக்காட்டுகின்றன. “குறையாத அன்பு” என்பது எந்த நோக்கமுமின்றி, நிபந்தனையின்றி நம்மை நேசிக்கும் பரம அன்பை விளக்கும் சொல். இந்த பாடல், தெய்வீக அன்பின் ஆழத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. இசையும், சொற்களும் இணைந்து ஒரு ஆனந்த அனுபவத்தை தருகின்றன, இதனால் இது ஒரு மறக்க முடியாத ஆன்மிகப் பயணமாகிறது.
Song Title: Kurayatha Anbu
Album : Nan Maravaen
Singer : Surender & Arunthathi
Lyrics : Rev.Fr.John Kuzhanthai
